Aran Sei

‘லே’ சீனாவுக்கு சொந்தமா? – டிவிட்டர் நிறுவனத்திற்கு மத்திய அரசு கடும் கண்டனம்

ந்திய வரைபடத்தை தவறாக குறிப்பிட்ட டிவிட்டர் நிறுகூனத்திற்கு இந்திய அரசு கடுமையான கண்டனத்தை தெரிவித்துள்ளது.

டிவிட்டரின் தானியங்கி இடம் அறியும் செயலி, லடாக் யூனியன் பிரதேசத்தில் உள்ள லே பகுதியை, சீனாவின் ஒருங்கிணைந்த பகுதியாக காண்பித்துள்ளது.

இதைத் தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஜாக் டார்சேவுக்கு தகவல் தொழில்நுட்ப செயலாளர் அஜய் சவ்ஹ்னி எழுதியுள்ள கடிதத்தில், இந்தியாவின் இறையாண்மையை மதிக்காத செயலை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.

தகவல் தொழில்நுட்பத்துறை வட்டாரங்கள், பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இந்த தகவலை உறுதி செய்துள்ளனர்.

இதுபோன்ற செயல், டிவிட்டரின் நன்மதிப்பை குறைப்பதுடன், அதன் நடுநிலை, வெளிப்படைத்தன்மை மற்றும் சார்பற்ற நிலைபாட்டை கேள்வி எழுப்புவதாக அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

லடாக் யூனியன் பிரதேசத்தின் தலைமையகம் லே என்றும், லடாக்கும், ஜம்மு காஷ்மீரும், இந்திய அரசமைப்பால் ஆளப்படும், இந்தியாவின் பிரிக்க முடியாது ஒருங்கிணைந்த பகுதி என்றும் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்திய குடிமக்களின் எண்ணத்திற்கு மதிப்பளிக்க வேண்டும் என்றும், டிவிட்டர் வெளியிட்டுள்ள வரைபடம், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு எதிரானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது ஏற்றுக்கொள்ள முடியாத மற்றும் சட்டத்திற்குப் புறம்பான செயல் என்றும் தகவல் தொழில்நுட்ப செயலாளர், டிவிட்டர் நிறுவனத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்