Aran Sei

அயோத்தி: மசூதி கட்டும் நிர்வாகக்குழுவில் அரசைச் சேர்க்க கோரிக்கை – நிராகரித்த உச்ச நீதிமன்றம்

யோத்தியில் மசூதி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட அறக்கட்டளையில், மத்திய மற்றும் மாநில அரசு பிரதிநிதிகளைச்  சேர்த்துக்கொள்ள பரிந்துரைக்க வேண்டும் என்ற கோரிக்கை மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

அயோத்தியில் பாபர் மசூதி மதஅடிப்படைவாதிகளால் இடிக்கப்பட்டு, அந்த இடத்தில் ராமர் பிறந்தார் என்று கூறி , அவ்விடத்தை ராமர் கோயில் கட்ட வேண்டும் என்று உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. அவ்வழக்கின் தீர்ப்பைக் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் உச்ச நீதி மன்றம் வழங்கியது. அதில், புதிய மசூதி கட்டுவதற்காக சன்னி வக்ஃப் வாரியத்திற்கு ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்குமாறு மத்திய அரசிற்கு, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், அந்த சர்ச்சைக்குரிய நிலம், நம்பிக்கையின் அடிப்படியில் இந்து தரப்பிற்கு வழங்கப்பட்டது.

அயோத்தி ராமர் தரிசனம் எப்போது – யோகி ஆதித்யநாத் விளக்கம்

சமீபத்தில், வழக்கறிஞர்கள் ஷிஷிர் சதுர்வேதி மற்றும் கருனேஷ் குமார் சுக்லா ஆகியோர், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதில் ,”கடந்த ஜூலை 29 தேதி, அதற்கு ஒதுக்கப்பட்ட ஐந்து ஏக்கரில் மசூதியுடன், கலாச்சார மற்றும் ஆராய்ச்சி மையம், பொது சமையலறை, பொது பயன்பாட்டு வசதிகளுடன்  கூடிய மருத்துவமனை, நூலகம் போன்றவற்றை கட்ட, இந்தோ இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை  என்ற பெயரில் ஒரு அமைப்பை நிறுவுவதாக சன்னி வக்ஃப் வாரியம் அறிவித்திருந்தது.” என்று நினைவுக் கூர்ந்துள்ளது.

மதவாதத்தால் தகர்க்கப்பட்ட அயோத்தியின் நல்லிணக்க பாரம்பரியம்

மேலும், “அயோத்தியில் மசூதி கட்டுவதற்காக அமைக்கப்பட்ட, இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளையில், தனிநபர்கள் மற்றும் மாநில சன்னி வக்ஃப்  வாரிய உறுப்பினர்களுடன், மத்திய மற்றும் மாநில அரசு பிரதிநிதிகளையும் சேர்க்க வேண்டும். அப்போது தான், ஒதுக்கப்பட்ட நிதி முறையாக நிர்வகிக்கப்படுகிறதா என்று உறுதி செய்ய முடியும்.” என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு அதிகாரிகளை, அந்த அறக்கட்டளையில் சேர்த்துக்கொள்ள எந்த ஏற்பாடும் அதில் செய்யப்படவில்லை என்றும் அறக்கட்டளையில் உள்ள நிதி மற்றும் சொத்துக்களுக்கு சரியான நிர்வாகம் இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது.

‘ பாபர் மசூதி இடிப்பு சதித் திட்டம் இல்லை ‘ : தீர்ப்பு முழு விபரம்

மேலும், “தினமும் நூற்றுக்கணக்கான மக்கள், இந்த, இந்தோ- இஸ்லாமிய அறக்கட்டளையின் இணையதளத்தைப் பார்வையிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  அதனால் இதற்கு, இந்தியாவிலிருந்து மட்டுமல்ல வெளிநாடுகளிலிருந்தும் நிதி பங்களிப்புகள் கிடைக்கும்.” என்றும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 4), ரோஹிண்டன் நரிமன் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு முன் விசாரனைக்கு வந்த இந்த மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்