கொரோனா நோய்த்தொற்றுக்கு பிறகு தேர்தல் பிரச்சாரத்தில் பேசியபோது அதிபர் டிரம்ப் எல்லோரையும் முத்தமிட விரும்புவதாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் ட்ரம்ப், அக்டோபர் 1-ம் தேதி கொரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டு வெள்ளை மாளிகையில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார்,
காய்ச்சல் காரணமாக ஹெலிகாப்டர் மூலம் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றிருந்த டிரம்ப், நான்கு நாட்கள் சிகிச்சைக்கு பிறகு வெள்ளை மாளிகைக்கு திரும்பி வந்து அலுவலக வேலைகளில் ஈடுபட்டிருந்தார்.
கொரோனாவை குறித்து கவலைப்பட வேண்டாம், இந்த நோய்த்தொற்று வாழ்வின் மீது ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்க வேண்டாம் எனவும், கொரோனாவுக்கு பிறகு இருபது வருடங்களுக்கு முன் இருந்தது போல உற்சாகமாக உணர்வதாகவும் அதிபர் ட்ரம்ப் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டிருந்தார்.
நவம்பர் 3-ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் மருத்துவமனையில் இருந்து வந்த பிறகு டொனால்ட் ட்ரம்ப் தேர்தல் பிரச்சாரத்திலும் ஈடுபட்டு வருகிறார்.
ஃப்ளோரிடா மாகாணத்தில் மேற்கொண்ட பிரச்சாரத்தில், ”கொரோனாவுக்கு விரைவில் தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும். சிகிச்சையின்போது ஏதோ ஒரு மருந்தை நான் எடுத்துக்கொண்டேன். அது என்னவென்று கூட எனக்கு தெரியாது. ஆனால் நான் மிக விரைவில் குணமாகிவிட்டேன்.” என ட்ரம்ப் கூறியுள்ளார்.
”அது என்ன மருந்து என்பது குறித்து எனக்கு தெரியாது. ஆனால் அதை உட்கொண்ட பிறகு நான் சூப்பர் மேன் போல உணர்கிறேன்.” என்று அவர் கூறியதாக நியூயார்க் போஸ்ட் குறிப்பிட்டுள்ளது.
அதிபராக இருப்பதில் உள்ள சிறப்பான விஷயம், உடல் நலக்குறைபாடு ஏற்பட்டால் உலகத்தில் இவ்வளவு மருத்துவர்கள் உள்ளார்களா என்று கருதும் அளவுக்கு மருத்துவர்கள் சூழ்ந்து கொள்கிறார்கள் என்று குறிப்பிட்டு, 14 மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளித்ததாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.
கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அவர் பெற்றுள்ளதாகவும், அதனால் கூட்டத்தில் உள்ள அனைவருக்கும் முத்தம் கொடுக்கப் போவதாகவும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
Trump claims he's now "immune" to the coronavirus, feeling "powerful" and willing to "kiss everyone" in the audience. "I'll kiss the guys and the beautiful women," he said. pic.twitter.com/0brz0Rl8UQ
— The Washington Post (@washingtonpost) October 12, 2020
“எனக்கு எதிர்ப்புசக்தி இருப்பதாக கூறுகிறார்கள். நான் இறங்கி வந்து ஆண்கள் பெண்கள் என ஒவ்வொருவரையும் முத்தமிடலாம். அங்கு நிற்கும் அழகிய ஆணைப் பாருங்கள். மிகுந்த உற்சாகத்துடன் இல்லாவிட்டலும் கூட நான் அவரையும் முத்தமிடலாம்.” என்று டிரம்ப் கூறியதாக மிரர் செய்தித்தளம் குறிப்பிட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஜோ பிடன், “டொனால்டு டிரம்ப்பின் ஆட்சியில் 2,15,000 அமெரிக்கர்கள் கொரோனா பாதிப்புக்குள்ளாகி உயிர் இழந்திருக்கிறார்கள்.”
215,000 Americans have died from COVID-19 on Donald Trump’s watch.
It’s the greatest failure of presidential leadership in our nation’s history.
— Joe Biden (@JoeBiden) October 13, 2020
“அமெரிக்க வரலாற்றிலேயே, நாட்டின் தலைமை மிக மோசமான நிலையில் தோல்வியைச் சந்தித்திருப்பது இப்போதுதான்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.