காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் (யுபிஏ) சரத்பவாரை தலைவராக்கி, எதிர்கட்சிகளின் வலிமையான கூட்டணியால் காங்கிரஸுக்கு மீண்டும் நெருக்கடி கிளம்பியுள்ளதாகவும் இதற்காக, திமுக உள்ளிட்ட மாநிலக் கட்சிகள் ஒன்றிணைந்து முயற்சி எடுக்கத் தொடங்கி இருப்பதாகவும் திரிணாமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
பாஜகவிற்கு எதிராக காங்கிரஸின் தலைமையில் செயல்பட்டு வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி, 2014 ஆம் ஆண்டிற்கு முன்பாக தொடர்ந்து இரண்டு முறை மத்தியில் ஆட்சி செய்துள்ளது. அதை எடுத்து, பாஜக தலைமையிலான, தேசிய ஜனநாயகக் கூட்டணி இரண்டு முறை ஆட்சி அமைத்துள்ளது.
“நாட்டை வழிநடத்த ராகுல் காந்திக்குப் பக்குவம் போதாது” – ஷரத் பவார்
இந்நிலையில், திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூறும்போது, ‘‘ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவாரை அமர்த்தினால்தான் எதிர்கட்சிகளின் கூட்டணி வலுப்பெறும் என்பது மாநில கட்சிகளின் கருத்தாக உள்ளது. தன் கட்சிக்கே நிரந்தரத் தலைவரை அமர்த்தத் திணறும் கட்சியால் கூட்டணிக்கு தலைமை வகிக்க முடியாது.” என்று ‘இந்து தமிழ் திசை’ இணையத்திடம் விமர்சித்துள்ளனர்.
மேலும், “இப்பிரச்சனையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியின் தலைவரும் அம்மாநில முதல்வருமான கே.சந்திரசேகர ராவ் மற்றும் சிவசேனாவின் தலைவரும் மகராஷ்டிராவின் முதல்வருமான உத்தவ் தாக்கரே ஆகியோர் சேர்ந்து எடுக்கும் முயற்சிக்கு எங்கள் கட்சி தலைவி மம்தாவும் ஆதரவளித்துள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
பீகாரில் சரிந்த காங்கிரஸ் – கேள்விக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தலைமை
இதற்காக சரத்பவாரை, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவராக்கினால், எங்கள் கட்சியும் அந்த கூட்டணியில் சேரும் வாய்ப்புகள் உள்ளன.’’ என்று திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.