Aran Sei

விவசாயிகளை குறைத்து மதிப்பிடக் கூடாது : அமெரிக்க பிரபலம் ட்ரேவர் நோவா கருத்து

லகப் புகழ் பெற்ற நிகழ்ச்சியான ”தி டெய்லி ஷோ” வில் இந்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியும், இரண்டு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றியும், இந்திய அரசின் ஒடுக்குமுறை பற்றியும் அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் ட்ரெவர் நோவா கருத்து தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மூன்று விவசாயச் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களாகப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

உலகப் புகழ் பெற்ற பாப் இசைக் கலைஞரான ரிஹான்னா, விவசாயிகள் போராட்டக் களத்திற்கு இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டது பற்றிய சிஎன்என்செய்தியைப் பகிர்ந்து, அதுபற்றி நாம் ஏன் பேசவில்லை என்று ட்வீட் செய்திருந்தார்.

பத்திரிக்கையாளர் நேஹா தீக்‌சித் வீடு தாக்கப்பட்ட விவகாரம் – சர்வதேச பத்திரிகையாளர் அமைப்பு கண்டனம்

விவசாயிகள் போராட்டத்தின் மீதான அரசு அடக்குமுறைக்கு எதிரான ரிஹான்னாவின் பதிவு, உலக அரங்கில் பெரும் கவனத்தை ஈர்த்தது. அதனைத் தொடர்ந்து, விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகப் பருவநிலை மற்றும் சுற்றுச்சூழல் செயல்பாட்டாளர் கிரேட்டா துன்பெர்க், நடிகை மியா கலீஃபா, ஜேமி மார்கன், மீனா ஹாரிஸ், லிசி கங்குஜம், வனேசா நகாடே, உள்ளிட்ட பல வெளிநாட்டு பிரபலங்களும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து சமூக வலைதளங்களில் கருத்து கூறிவருகின்றனர்.

விவசாயிகள் போராட்டம் – கிரேட்டா துன்பெர்க் ஆதரவு, ரிஹான்னாவுக்கு கங்கனா பதில்

இதற்குக் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய அரசு விவசாயத்துறையில் சீர்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளதாகவும், சிறிய அளவிலான விவசாயிகளே போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தது.

விவசாயிகளின் போராட்டத்திற்கு பாப் இசைக் கலைஞர் ரிஹான்னா ஆதரவு – டிவிட்டரில் பெரும் ஆதரவு

”இது போன்ற விஷயங்களில் விரைந்து கருத்து தெரிவிப்பதற்கு முன், உண்மைகளை அறிந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம். பிரச்சினைகள்குறித்து சரியான புரிதல் வேண்டும்” எனவும் முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளில், பிரபலங்கள் கூறும் கருத்துக்கள் ”துல்லியமானதாகவோ” அல்லது ”பொறுப்பானதாகவோ” இல்லை எனவும் வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது.

“ரிஹான்னா பாகிஸ்தனைச் சேர்ந்த பாடகர்” – பாஜக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து

இந்நிலையில், நேற்றைய தினம், உலக புகழ் பெற்ற அரசியல் விமர்சகர், நடிகர், நகைச்சுவை கலைஞர், தி டெய்லி ஷோ நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான ட்ரெவர் நோவா விவசாய போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து தன்னுடைய நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

8 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்த காணொளியில் மூன்று வேளாண் சட்டங்கள் பற்றியும், இரண்டு மாதங்களுக்கு மேலாக நடக்கும் விவசாயிகள் போராட்டம் பற்றியும், இந்திய அரசின் ஒடுக்குமுறை பற்றியும் நோவா விளக்கியுள்ளார்.

ரிஹான்னாவிற்கு எதிராக ட்வீட் செய்த பாலிவுட் நடிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் – நடிகை தாப்சி பன்னு பதிலடி

”கடந்த ஒன்பது மாதங்கள் (கொரோனா காலகட்டம்) உலகத்திற்கு விவசாயிகளின் முக்கியத்துவத்தை உணர்த்தியுள்ளது. நாம் நம்முடைய வீடுகளில் உள்ள இடங்களில் சிறிய அளவில் செடியையோ காய்கறிகளையோ வளர்க்க தொடங்கினோம். ஆனால், நம்மால் செடிகளையோ காய்கறிகளையோ வளர்க்க முடியவில்லை, சக மனிதர் மீதான வெறுப்பை மட்டும் தான் வளர்த்துக் கொண்டோம். விவசாயிகளை நாம் குறைத்து எடைபோடக் கூடாது” என நோவா கூறியுள்ளார்.

“ரிஹான்னா இஸ்லாமியரா?” – கூகுள் இணையதளத்தில் முதல் இடம் பிடித்த கேள்வி

நான்கு வருடங்கள் ஆனாலும் போராட்டத்தை கைவிட மாட்டோம் என விவசாயிகள் கூறுவதை குறிப்பிட்டு பேசிய நோவா “ அவர்கள் கூறுவது எனக்கு ஆச்சரியமாக இல்லை. இந்த உலகத்திலேயே மிகவும் பொறுமையானவர்கள் விவசாயிகள் தான். ஒரு கத்திரிக்காயை விளைவிக்கவே அவர்கள் ஐந்து மாதங்கள் பொறுமையாக காத்திருப்பர்” என்று விவசாயிகளின் மன உறுதியைப் பற்றி தெரிவித்துள்ளார்.

கிரேட்டா துன்பெர்க், மீனா ஹாரிஸ், ரிஹான்னா படங்களை எரித்து ஆர்ப்பாட்டம் – யுனைட்டட் ஹிந்து முன்னணி

இந்தியாவின் பிரச்சனையில் வெளிநாட்டு பிரபலங்கள் கருத்து தெரிவிக்க கூடாது என மத்திய அரசும், இந்திய பிரபலங்களும் எதிர்ப்பு தெரிவித்தாலும் விவசாயிகள் போராட்டத்திற்கான சர்வதேச ஆதரவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்