Aran Sei

மாற்றுபாலினத்தவர்கள் காவலராக நியமனம் – சத்தீஸ்கர் காவல்துறை முதல்முறையாக நடவடிக்கை

த்தீஸ்கர் மாநில காவல்துறையில் முதல் முறையாக 13 மாற்றுபாலினத்தவர்கள் காவலராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு, உச்சநீதி மன்றம் மாற்றுப்பாலினத்தவர்களை மூன்றாம் பாலினமாக அங்கீகரித்தது.

இந்நிலையில், சுமார் இரண்டு மில்லியன் காவலர்களை கொண்ட வலிமையான படையை உடைய இந்தியாவில், மிகவும் விளிம்புநிலை சமூகமான மாற்றுப்பாலினத்தவர்களில் இருந்து இருவர் மட்டுமே காவலர்களாக இதுவரை பணியமர்த்தப்பட்டிருந்ததாகவும் அதற்கடுத்து தற்போது தான் சத்தீஸ்கர் மாநில காவல்துறையில் அதிக எண்ணிக்கையில் மாற்றுப்பாலினத்தவர்கள் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார்கள் என்று என்டிடிவி குறிப்பிடப்பட்டுள்ளது .

திருநங்கை உரிமைக்காகப் போராடிய சமூக ஆர்வலர் ஸ்னேகா மரணம்: விசாரணையில் கேரள காவல்துறை

இதுகுறித்து பத்திரிக்கையாளர்களை சந்தித்த அம்மாநில காவல்துறை உயரதிகாரி டி.எம்.அவாஸ்தி ” சத்தீஸ்கர் காவல்துறையில் மாற்றுப்பாலினத்தவர்களை காவலராக நியமித்திருப்பது இதுவே முதல் முறை. நான் அவர்களை மனமாற வாழ்த்துகிறேன் ” என்று கூறியுள்ளதாக என்டிவி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் முதன்முதலாக 2017 ஆம் ஆண்டு மாற்றுப்பாலினத்தவர்களுக்கு அரசுப்பணி வழங்கப்பட்டது. உச்சநீதி மன்றம் 2014 ஆம் ஆண்டு மூன்றாம் பாலினமாக அறிவித்தப் பிறகு, மூன்றே ஆண்டுகளில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

திருநர்களுக்கு அனுமதி மறுத்த தேசிய மாணவர் படை : பாகுபாட்டை கடைப் பிடிக்கிறதா அரசு ? – கிரேஸ் பானு

மாற்றுபாலின சமுகம் தொடர்ந்து பல வகைகளில் சுரண்டப்பட்ட வருகிறது. அவர்களில் பலர், தம் வீடுகளை விட்டு வெளியேற்றப்படுவதும், உறவினர்களால் துரத்தப்பட்டுவதும் அவர்களை பாலியல் தொழில் மற்றும் பிச்சை எடுக்கும் நிலைக்கு தள்ளுகிறது.

கடந்த சில ஆண்டுகளாக, மத்திய, மாநில அரசுகள் மாற்றுபாலினத்தவர்களின் நலனுக்காக பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக, மத்திய பாதுகாப்பு படையில், மாற்றுபாலினத்தவர்களை பணியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக திருத்த மசோதா: பஞ்சாபைத் தொடரும் சத்தீஸ்கர்

மேலும், கடந்த ஜனவரி அன்று பீகார் மாநிலம் தனது காவல்துறையில் தேர்வு செய்யப்படும் 500 காவலர்களுக்கு ஒரு காவலர் மாற்றுப்பாலினத்தவர்களில் இருந்து தேர்வு செய்யப்படுவார்கள் என்று அறிவிப்பு வெளியிட்டிருப்பதாக என்டிடிவி வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது .

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்