Aran Sei

நாட்டில் சீர்திருத்தத்தை மேற்கொள்வதற்குத் தடையாக இருக்கும் ஜனநாயகம் – பாஜக செய்தி தொடர்பாளர்

ஜனநாயகத்தில், எந்த ஒரு சீர்திருத்தத்தையும் மேற்கொள்வது மிகவும் கடினம் என்று நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி கூறியது தவறெனில், பொருளாதார சீர்திருத்தங்கள் ஏன் இன்னும் நிலுவையில் உள்ளன? என்று பாஜகவின் பொருளாதார விவிகாரத்துறை செய்தி தொடர்பாளர் கோபாலகிருஷ்ண அகர்வால் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னதாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைவின் உடைமையாளரான வேதாந்தா குழுமத்தின் ஆதரவில் செயல்படும் வலதுசாரி பத்திரிகையான ஸ்வராஜ்யா, “ஆத்மநிர்பர் பாரதத்தை நோக்கி” (The Road to Atmanirbhar Bharat) என்ற தலைப்பில் இணைய வழி கூட்டத்தை நடத்தியுள்ளது.

ரூ.20 லட்சம் கோடி – வெறும் வாய் உறுதி : வெங்கடேஷ் ஆத்ரேயா

இந்தக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு பேசிய நிதி ஆயோக்கின் (இந்தியாவை உருமாற்றுவதற்கான தேசிய நிறுவனம்) தலைமைச் செயல் அதிகாரி அமிதாப் காந்த் ”இந்தியாவில் அளவுக்கதிகமான ஜனநாயகம் இருப்பதால் கடினமான சீர்திருத்தங்களை அமல்படுத்த முடியவில்லை” என்று கூறியுள்ளார்.பின்னர் தான் அவ்வாறு பேசவே இல்லை என்று மறுப்பும் தெரிவித்துள்ளார்.

”இந்தியச் சூழலில் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வருவது மிகவும் கடினம் ஏனேனில் நாம் மிகவும் ஜனநாயகமாக இருக்கிறோம். சுரங்கம், நிலக்கரி, தொழிலாளர் மற்றும் வேளாண்மை துறைகளில் கடினமான சீர்திருத்தங்களைச் மேற்கொள்வதற்கான தைரியமும் உறுதியும் முதன்முறையாக இந்த அரசாங்கத்திடம் இருக்கிறது. இவை மிகவும் கடினமான சீர்திருத்தங்கள். இந்த சீர்திருத்தங்களைச் செய்வதற்கு உங்களுக்கு அரசியல் உறுதியும் மற்றும் நிர்வாகத்தின் விருப்பமும் தேவை” என்று காந்த் கூறியதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது

இதையடுத்து #toomuchofdemocracy எனும் வாக்கியம் ட்விட்டரில் வைரலானது.  பலரும் பாஜகவை இந்த வாக்கியத்தின் மூலம் பகடி செய்ய தொடங்கியுள்ளனர்.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி “மோடி அரசாங்கத்தின் கீழ் சீர்திருத்தம் என்பது திருட்டு, மொத்தமாக ஜனநாயகத்தை திருட பார்க்கிறார்கள்” என ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அமிதாப் காந்தின் கருத்து குறித்து மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு,“நிதி ஆயோக் அதிகாரி ஏற்கனவே தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளார். நமது ஜனநாயகம் துடிப்பானதாக இருக்கிறது, நமது ஜனநாயகம் குறித்து நாம் பெருமைப்பட வேண்டும்” என்று பதிலளித்துள்ளார்.

இந்நிலையில் பொருளாதார விவகாரத் துறைக்கான பாஜகவின் தேசிய செய்தித் தொடர்பாளர் கோபால் கிருஷ்ணா அகர்வால் ”1991 க்குப் பிறகு முக்கியமான சீர்திருத்தங்கள் எதுவும் கொண்டு வராதது இந்தியத் தொழிற்துறையை உலகளவில் போட்டியிட தகுதியற்றதாக மாற்றியுள்ளது, என நித்தி அயோக் தலைவர் கூறியதை ஆமோதிக்கும் வகையில் கருத்து தெரிவித்துள்ளார் என தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

” இந்தியாவில் அளவுக்கதிகமான ஜனநாயகம் ” – நிதி ஆயோக் தலைவர் அமிதாப் காந்த்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை மேற்கோள் காட்டி பேசிய அவர்,” விவசாயத் துறை போட்டித்தன்மையுடன் இருக்க வேண்டும் என அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் அரசு மேற்கொண்டுள்ள சீர்திருத்தங்கள் தடைபட்டு வருவதை நாம் காண்கிறோம். நாங்கள் மேற்கொண்ட நில சீர்திருத்தங்கள் நிலுவையில் உள்ளன 2013-ம் ஆண்டு கொண்டு வந்த நிலச் சட்டம் சந்தையில் போட்டியிடுவதற்கு உகந்ததல்ல, ”என்று கூறியுள்ளார்.

டவுன்லோடில் சாதனை செய்த ஆரோக்கிய சேதுவின் பயன் தான் என்ன?!  

நித்தி அயோக்கின் தலைமை நிர்வாக அதிகாரி (அமிதாப் காந்த்) ஜனநாயகத்தில், எந்த சீர்திருத்தத்தையும் செய்வது மிகவும் கடினம் என்று கூறிய கருத்து தவறெயெனில், பொருளாதார சீர்திருத்தங்கள் ஏன் இன்னும் நிலுவையில் உள்ளன? சீர்திருத்தங்களுக்கு ஒரு அரசியல் கட்சி எவ்வளவு முதலீடை செலவிட முடியும்? என்று அகர்வால் கேள்வியெழுப்பியுள்ளார்.

‘மீண்டும் தனியார்மயமாக்கல்’ – நிதி ஆயோக் ஆலோசனை

பொருளாதார வல்லுநர்களும் கல்வியாளர்களும் சீர்திருத்தங்களை அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளும் வகையில் ஒரு விவரணையை உருவாக்க அரசாங்கத்திற்கு உதவுவது இல்லை என அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

“காலம் கடந்தாலும் சீர்திருத்தங்கள் எப்போதுமே பலன்களைக் கொண்டிருக்கின்றன, ஆனால் பங்குதாரர்களின் நன்மைகள் எப்போதும் பாதிக்கப்படுகின்றன. நீங்கள் ஒரு சீர்திருத்தத்தை மேற்கொள்ளும்போதெல்லாம் அதனால் பலனடைய போகும் பங்குதாரர்கள் எதிர்க்கிறார்கள் எனவே இது சீர்திருத்த செயல்முறைக்குத் தடையாக இருக்கிறது, ”என்று இணைய வழி கருத்தரங்கில் அகர்வால் பேசியுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்