Aran Sei

’போராட்டத்தை கைவிட்டு, பேச்சுவார்த்தைக்கு வாருங்கள்’ – விவசாயத் துறை அமைச்சர்

விவசாயிகள் தங்கள் போராட்டத்தை கைவிட்டு விட்டு, மூன்று விவசாய சட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும் என்று மத்திய விவசாயத் துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கோரியுள்ளார்.

இன்று (டிசம்பர் 25), செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய நரேந்திர சிங் தோமர், மூன்று விவசாய சட்டங்களின் முக்கியத்துவத்தை விவசாயிகள் புரிந்துகொண்டு மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, ஒரு தீர்வை எட்டுவார்கள் என்று நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

“அரசு தனக்குத்தானே பேசிக்கொள்வதை நிறுத்த வேண்டும்” – விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவர்

“போராட்டத்தை கைவிட்டு விட்டு அரசுடன் பேச்சுவார்த்தைக்கு முன்வருமாறு நான் அவர்களை வலியுறுத்திக்கொள்கிறேன். புதிய சட்டங்களின் முக்கியத்துவத்தை அவர்கள் புரிந்துகொண்டு ஒரு நல்ல முடிவை எடுப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் (டிசம்பர் 23) விவசாயிகள் சங்கங்கள் மத்திய அரசின் பேச்சுவார்த்தையை நிராகரித்த நிலையில், நேற்று (டிசம்பர் 24) மத்திய அரசு மீண்டும் பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தது.

மோடிக்கு ரத்தத்தில் கடிதம் – சட்டங்களைத் திரும்பப் பெற விவசாயி கோரிக்கை

போராட்டத்தில் ஈடுபட்டுவரும் விவசாயிகள் சங்கங்களுக்கு விவசாயத்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் விவேக் அகர்வால் மூன்று பக்க கடிதத்தை அனுப்பியிருந்தார்.

அதில், ”இந்த மூன்று விவசாய சட்டங்கள் குறைந்தபட்ச ஆதரவு விலை உடன் தொடர்புடையவை அல்ல என்றும் இது எந்த வகையிலும் பாதிக்காது. எனவே, இது தொடர்பாக வைக்கப்படும் எந்த புதிய கோரிக்கையையும் நியாப்படுத்த முடியாது. ஆனாலும், விவசாயிகளின் சங்கங்கள் எழுப்பியுள்ள அனைத்து பிரச்சினைகளையும் விவாதிக்க மத்திய அரசு தயாராக உள்ளது.” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்