Aran Sei

‘மோடி பொய் சொல்கிறார்’ : சி.பி.ஐ மாநில செயலாளர் ரா.முத்தரசன்

credits:nakkheeran.in

டந்துவரும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்டம், வேளாண் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம், பண்ணை ஒப்பந்த சட்டம் ஆகிய சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

பஞ்சாப், ஹரியானா, மேற்கு உத்திரபிரதேச விவசாயிகள் தொடர்ந்து இந்த சட்டங்களை எதிர்த்து சாலை மறியல் மற்றும் ட்ராக்டர் நிரப்பும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். இதன் ஒருபகுதியாக, விசாய திருத்த சட்டங்களை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) நாடு தழுவிய போராட்டத்தை நடத்தியது.

சென்னை பாரிமுனையில் விவசாய சட்டங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

முன்னறிவிப்பு செய்யப்பட்ட போராட்டம் என்பதால் அதிக அளவில் காவலர்கள் குவிக்கப்பட்டிருந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்கள் பேரணியாக கோட்டை நோக்கி செல்ல முற்பட்ட போது காவலர்கள் அவர்களை தடுத்து நிறுத்தினர்.

வேளாண் சட்டதிருத்த மசோதாக்களை திரும்பப்பெற வலியுறுத்தியும், மாநில அரசைப் பதவி விலகக் கோரியும் அவர்கள் முழக்கமிட்டனர். சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரு கைது செய்யப்பட்டனர்.

போராட்டத்திற்கிடையே, விவசாய சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகம் செய்தியாளர்களிடம் பேசுகையில், “செப்டம்பர் 25-ம் தேதி நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலை உட்பட 500 இடங்களில் மிகப்பெரிய அளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.” எனக் கூறியுள்ளார்.

“விவசாயிகளின் நலன்களுக்கு எதிரான மசோதாக்கள் நிறைவேற காரணமாக இருந்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்டு பதவி விலக வேண்டும். குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்தோ, அரசு கொள்முதல் குறித்தோ எந்த அறிவிப்பும் இந்த சட்டங்களில் இல்லை. அரசு கொள்முதல் செய்யும் போதே குறைந்தபட்ச ஆதரவு விலை கட்டுப்படியாகவில்லை.” என சண்முகம் தெரிவித்துள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் நேற்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் வேளாண் மசோதாக்களை கண்டித்து தொடர் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளார்.

”இந்த மசோதாக்களால் விவசாயிகளுக்கு நிறைய பயன் உண்டு என பிரதமர் மோடி பொய் சொல்கிறார். மத்திய அரசு எதைக் கொண்டுவந்தாலும், முதல்வர் பழனிசாமி கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கிறார். இந்தியாவிலேயே இந்தச் சட்டத்தை ஆதரிக்கும் ஒரே விவசாயி முதல்வர் பழனிசாமிதான்.” என்றும் அவர் கூறியுள்ளார்.

credits: aninews.inராமேஸ்வரத்தில் மார்க்சிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் காய்கறிகளால் ஆன மாலை அணிந்துகொண்டு மத்திய அரசைக் கண்டித்து முழக்கமிட்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் செய்தனர்.

இந்தியாவின் பல மாநிலங்களில் விவசாயிகள் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்