Aran Sei

‘பிளவை ஏற்படுத்தும் மேற்கு வங்க ஆளுநரை திரும்ப பெறுங்கள்’ – குடியரசு தலைவருக்கு திரிணாமுல் கடிதம்

மேற்கு வங்க ஆளுநர் ஜகதீப் தங்கரை நீக்கக் கோரி குடியரசுத் தலைவரிடம்டம் கோரிக்கை வைத்துள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக, இன்று (டிசம்பர் 30) திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினர் சுகேந்து சேகர் ராய்,  குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு 20 பக்கம் கொண்ட ஒரு கோரிக்கை கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் என்று தி இந்து தெரிவித்துள்ளது.

மேற்கு வங்க தேர்தல் – சிஏஏ குறித்து அடக்கி வாசிக்கும் அமித் ஷா – ஆள் பிடிக்கும் வேலையில் இறங்கியுள்ள பாஜக

“இந்திய அரசியலமைப்பின் 156 (1) வது பிரிவின் கீழ், உங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தைப் பயன்படுத்தி, பதவியேற்பு உறுதிமொழியை மீறிய மரியாதைக்குரிய மேற்கு வங்க ஆளுநர் ஸ்ரீ ஜகதீப் தங்கரை திரும்ப பெற வேண்டும் என்று நாங்கள் மரியாதையுடன் கேட்டுக்கொள்கிறோம்.” என்று  சுகேந்து சேகர் ராய் உட்பட ஐந்து மூத்த திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அக்கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேற்கு வங்கத்தில் பாஜக படுதோல்வியடையும் – பிரஷாந்த் கிஷோர் சவால்

டிசம்பர் 29 ஆம் தேதியிட்ட அக்கடிதத்தில், அளூநர் ஸ்ரீ ஜகதீப் தங்கர் அரசியலமைப்பைப் பாதுகாக்க தவறிவிட்டார் என்றும் “மாநிலத்தின் மிக உயர்ந்த அரசியலமைப்பு பதவியில் இருந்துக்கொண்டு, மரியாதைக்குரிய ஆளுநர் ஜகதீப் தங்கர் அவர்கள், மத்தியிலும் மாநிலத்திலும் எதிர் எதிர்கட்சிகள் ஆட்சியில் இருப்பதை வைத்து, இங்கே பிளவுபடுத்தும் அரசியலைத் தூண்டு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்.” என்று கடிதத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய சுகேந்து சேகர் ராய், ”மாநில அரசை குறிவைத்து ஆளுநர் செயல்பட்ட விதம், நாட்டின் அரசியலமைப்பு வரலாற்றில் முன்பு எப்போது நடக்காதது. ஆளுநர் அரசியலமைப்பின் (லட்சுமன் ரேகா) எல்லையைத் தாண்டிவிட்டார்.” என்று விமர்சித்துள்ளார்.

மேற்கு வங்க தேர்தல் – குடியுரிமை திருத்தச் சட்டத்தை கையில் எடுக்கும் பாஜக

மேற்கு வங்க அரசிற்கு எதிராக ஆளுநரால் எழுதப்பட்ட ட்வீட்களையும் சமூக ஊடகங்களில் இடப்பட்ட கருத்துகளின் நகலையும் அக்கடிதத்தோடு இணைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்