மேற்கு வங்கம் ஹவுரா மாவட்டத்தில் டோமுர்ஜில்லா மைதானத்தில் நடைபெற்ற பாஜகவின் பேரணியில், தேசிய கீதம் அவமதிக்கப்பட்டதாக திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். பேரணியில் பாஜக தலைவர்கள் தேசிய கீதம் பாடும் காணொளிகளை திரிணாமுல் காங்கிரஸ் தலைவர்கள் பலர் ட்வீட் செய்துள்ளனர்.
இந்தப் பேரணியில் மாநில பாஜக தலைவர் திலீப் கோஷ், மத்திய ஜவுளித்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மற்றும் அண்மையில் திரிணாமூலில் இருந்து பாஜகவில் இணைந்த ராஜீப் பானர்ஜி உள்ளிட்ட ஐந்து முன்னாள் திரிணாமூல் தலைவர்கள் கலந்து கொண்டிருந்தனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, காணொளி வழியாக உரையாற்றினார்.
இதுகுறித்து, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் பானர்ஜி தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்துள்ளார்.
Those preaching about Patriotism & Nationalism can’t even sing our National Anthem correctly.
This is the party which claims to uphold India’s honour and pride! SHAMEFUL!
Will @narendramodi @AmitShah @BJP4India apologise for this “Anti-National” Act?#BJPInsultsNationalAnthem pic.twitter.com/fgdCEMPisk
— Abhishek Banerjee (@abhishekaitc) January 31, 2021
அதில்,“தேசபக்தி பற்றியும் தேசியவாதம் பற்றியும் பாடம் நடத்துபவர்களால், நம் தேசிய கீதத்தை கூட சரியாக பாட தெரியவில்லை. இந்தியாவின் கௌரவத்தையும் பெருமையையும் நிலைநிறுத்துவதாகக் கூறும் கட்சி இது. வெட்கக்கேடானது. இந்த ‘தேச விரோத’ செயலிற்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக மன்னிப்பு கேட்குமா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
’ஜெய் ஸ்ரீராம்’ முழக்கம்; பேச்சை தவிர்த்த மம்தா: பிரதமர் முன்பாக நடந்த சம்பவத்திற்கு எழும் கண்டனம்
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள மேற்கு வங்க கூட்டுறவு துறை அமைச்சர் அருப் ராய், “எப்போது பாஜக வந்ததோ, அப்போதிருந்து நாட்டில் குழப்பத்தையும் சேதத்தையும் மட்டுமே ஏற்படுத்தியுள்ளது. இன்று அவர்கள் நமது தேசிய கீதத்தையும் அவமதித்துள்ளனர்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.
Even since @BJP4India has come to existence, it has only caused chaos and damage to the nation. Today they have insulted our National Anthem. #BJPInsultsNationalAnthem pic.twitter.com/Wo13O12jYa
— Arup Roy (@OfficialArupRoy) January 31, 2021
இந்த சம்பவத்தை தொடர்ந்து, #BJPInsultsNationalAnthem என்ற ஹேஷ் டேக் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.