Aran Sei

‘பிரதமர் கருணையைப் பற்றி பாடம் எடுப்பதை விடுத்து, போராடும் விவசாயிகளுக்கு கருணை காட்டுங்கள்’ – திரிணாமூல்

மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜியால், மக்களுக்கு கொடூரமான ஆட்சியே கிடைத்தது என்ற பிரதமர் மோடியின் விமர்சனத்துக்கு, “மம்தாவை குறை சொல்வதற்கு பதிலாக 70 நாட்களாகப் போராடும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கருணை காட்டலாம்” என்று திரிணாமூல் பதில் அளித்துள்ளது.

நேற்று (பிப்பிரவரி 7) மேற்கு வங்க மாநிலம் ஹால்டியா நகரில் எண்ணெய் எரிவாயு திட்டங்களையும், பல்வேறு வளர்ச்சிப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார். அதன்பின் நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியுள்ளார்.

‘வடஇந்தியாவின் “ஜெய் ஸ்ரீராம்” மேற்கு வங்கத்தின் முழக்கமல்ல. ஜெய் வங்காளமே எங்களுடையது’ – திரிணாமூல் காங்கிரஸ்

அப்போது, “மேற்கு வங்க முதல்வர் மம்தாவிடம் மக்கள் அன்பான ஆட்சியை எதிர்பார்த்தார்கள். ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக அவரிடம் இருந்து கொடூரமான ஆட்சிதான் கிடைத்தது.  வங்காளம் கால்பந்தை நேசிக்கும் ஒரு மண். ஆகவே, நானும் அந்த மொழியில் பேசிகிறேன். திரிணாமூல் காங்கிரஸ் ஒன்றன்பின் ஒன்றாக பல தவறுகளைச் செய்துள்ளது. நிர்வாகத்தில் செய்த மோசடிகள், எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான தாக்குதல்கள்.. வங்காள மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். வங்காள மக்கள் விரைவில் திரிணாமுல்  கட்சிக்கு ராம்கார்டைக் காட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்கம் – லெனின் சிலையை திறந்து வைத்த திரிணாமூல் காங்கிரஸ் எம்எல்ஏ

பிரதமர் மோடியின் பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய திரிணமூல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சவுகதா ராய், “மேற்கு வங்க மக்கள் வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு ரெட் கார்டு காட்டுவார்கள். முதல்வர் மம்தா பானர்ஜியை குறை சொல்வதற்கு பதிலாக பிரதமர் மோடி, விவசாயிகள் பிரச்சினை மீது கவனம் செலுத்தலாம். 70 நாட்களாகப் போராடும் விவசாயிகளுக்கு பிரதமர் மோடி கருணை காட்டலாம். விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தில் ஏராளமான விவசாயிகள் உயிரிழந்துவிட்டார்கள். ஆனால், மோடியிடம் இருந்து எந்த கருணையையும் அன்பையும் பார்க்கவில்லை.” என்று விமர்சித்துள்ளார்.

மேலும், “கடந்த 2016-ம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையில் ஏராளமான மக்கள் உயிரிழந்தார்கள். அப்போதும் கூட பிரதமரிடம் இருந்து கருணையை பார்க்கவில்லை. கருணையைப் பற்றி பேசுவதைக் குறைத்துக்கொண்டு அதை செயலில் காட்ட வேண்டும்.” என்று சவுகதா ராய் கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்