Aran Sei

மது அருந்தக்கூடாது எனும் காந்தியக் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்கள் அல்ல பாவிகள் – பீகார் முதலமைச்சர்

து அருந்தக் கூடாது என்ற மகாத்மா காந்தியின் கொள்கையை நிராகரிப்பவர்கள் இந்தியர்களே அல்ல, அவர்கள் மிகப்பெரும் பாவிகள் என்று பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்.

பீகார்: பாதுகாப்பையும் மீறி முதலமைச்சரைத் தாக்கிய இளைஞர்

பீகாரில் மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம் 2016 தவறாக அமல்படுத்தப்பட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் பீகாரில் 200க்கும் மேற்பட்டவர்கள் கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர்.

பீகாரில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும் மது என்பது உடலுக்குத் தீங்கு என்று தெரிந்தும் அதனைக் குடிப்பது குடிப்பவர்களின் தவறு. ஆகவே பீகாரில் மார்ச் 19 அன்று கள்ளச் சாராயம் குடித்து 12 பேர் உயிரிழந்தனர். கள்ளச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு எவ்வித நிவாரணமும் தரமுடியாது என்று நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மதுவிலக்கு தொடர்பாக ஊடகங்களிடம் பேசாதீர்கள்; இல்லை கூட்டணியிலிருந்து விலகுங்கள் – பீகார் முதலமைச்சர் எச்சரிக்கை

பீகார் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மதுவிலக்கு மற்றும் கலால் சட்டம் 2016 இல் சில தளர்வுகளை வழங்கப் பீகார் அரசு முன்வந்துள்ளது.

அதன்படி மதுவிலக்கு சட்டத்தை முதன்முறையாக மீறி குடிப்பவர்கள் இனிமேல் நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள். குற்றவாளிகளுக்கான அபராத தொகையை அரசே நிர்ணயம் செய்யும். அந்த அபராத தொகையை செலுத்தாதவர்களுக்கு 1 மாதம் சிறைத் தண்டனையும் விதிக்கப்படும் என்று பீகார் அரசு தெரிவித்துள்ளது.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்