பாஜகவின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராக பல்வேறு கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியாக தெலுங்கானா முதலமைச்சரும் தெலுங்கானா ராஷ்ட்ரிய சமீதி கட்சியின் தலைவருமான சந்திரசேகர் ராவ் நேற்று (பிப்ரவரி 28) டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார்.
சந்திரசேகர் ராவ் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், இப்பயணம் குறித்து மேலதிக விவரங்கள் வெளியிடப்படவில்லை.
டெல்லியில் ஒருமித்த சிந்தனை கொண்ட கட்சிகளின் தலைவர்களுடன் சந்திரசேகர் ராவ் கலந்துரையாடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாஜகவை எதிர்கொள்ள மூன்றாவது அணி – சந்திரசேகர ராவ் தலைமை ஏற்க சிவசேனா அழைப்பு
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தேர்தல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோருடனான சந்திப்பு மற்றும் அதற்கு முன்னதாக மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் ஆகியோருடனான சந்திப்புகளின் தொடர்ச்சியாக இந்த டெல்லி பயணம் பார்க்கப்படுகிறது.
பாஜகவுக்கு எதிராக அரசியல் களத்தில் மூன்றாவது அணி அமைக்கும் வேலைகளில் சந்திரசேகர் ராவ் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.
‘கோல்மால் பட்ஜெட்’ – தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் விமர்சனம்
பாஜகவிற்கு எதிரான போரில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் என கே.சந்திரசேகர ராவிடம் முன்னாள் பிரதமரும் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான எச்.டி.தேவகவுடா உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
Source: PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.