Aran Sei

விவசாயிகளின் கோரிக்கைகளை ஒன்றிய அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் – குடியரசுத் தலைவருக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா கடிதம்

குறைந்தபட்ச ஆதார விலை உட்பட விவசாயிகளுக்கு எழுத்துப்பூர்வமாக ஒன்றிய அரசு அளித்த வாக்குறுதிகளை அவர்களுக்கு நினைவூட்ட வேண்டும் என்றும், அவை நிறைவேற்றப் படாவிட்டால் விவசாயிகளின் போராட்டம் மீண்டும் தொடங்கும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு சம்யுக்த் கிசான் மோர்ச்சா இன்று (மார்ச் 22) கடிதம் எழுதியுள்ளது.

வாக்குறுதிகள் நிறைவேற்றாவிட்டால் விவசாயிகள் போராட்டம் தொடங்கும் – ஒன்றிய அரசை எச்சரித்த சம்யுக்த் கிசான் மோர்ச்சா

“டெல்லி எல்லையில் இருந்து விவசாயிகள் தங்களது போராட்டங்களை கைவிட்டு விட்டு வெளியேறியதில் இருந்து ஒன்றிய அரசு நிறைவேற்ற வேண்டிய வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கியுள்ளது. ஆகவே விவசாயிகளின் பொறுமையைச் சோதிக்க வேண்டாம். குடியரசுத் தலைவரின் வழியாக ஒன்றிய அரசை நாங்கள் எச்சரிக்கிறோம்” என்று அந்த கடிதத்தில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா குறிப்பிட்டுள்ளது.

ஏப்ரல் 11 – 17 வரை ‘குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்ட உத்தரவாத வாரம்’ கடைப்பிடிக்க படும் என்றும், ஒன்றிய அரசு அதன் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், விவசாயிகள் மீண்டும் போராட்டத்தைத் தொடங்குவதைத் தவிர வேறு வழியில்லை என்று சம்யுக்த் கிசான் மோர்ச்சா அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளது.

2021 டிசம்பர் 9 அன்று சம்யுக்த் கிசான் மோர்ச்சாவுக்கு எழுதிய கடிதத்தில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறித்து ஒரு குழு அமைக்கப்படும் என்று வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் செயலாளர் சஞ்சய் அகர்வால் கூறியிருந்தார்.

பிரதமர் வந்ததே விவசாயிகளுக்கு தெரியாது. பிரதமர் அருகில் இருந்தவர்கள் பாஜக தொண்டர்களே – சம்யுக்தா கிசான் மோர்ச்சா விளக்கம்

ஆனால், இதுவரை அப்படி எந்தக் குழுவையும் ஒன்றிய அரசு அமைக்கவில்லை எனவும் லக்கிம்பூர் கேரியில் விவாசாயிகள் கொல்லப்பட்டதற்கு நீதி வழங்கப்படாததையும் சம்யுக்த் கிசான் மோர்ச்சா கண்டித்துள்ளது.

Source : newindianexpress

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்