Aran Sei

8 ஆண்டுக்கால ஆட்சியில் பெட்ரோல், டீசல் வரி மூலம் ரூ.26 லட்சம் கோடி சம்பாதித்த ஒன்றிய அரசு – ப.சிதம்பரம் தகவல்

மோடி தலைமையிலான ஒன்றிய அரசு, ஆட்சிக்கு வந்த கடந்த 8 ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் கலால் வரி மூலம் 26,51,919 கோடி ரூபாயை வசூலித்துள்ளது என்று முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் நேற்று (ஏப்ரல் 3) தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றியை மக்களை கொள்ளையடிக்கும் உரிமையாக பாஜக கருதுகிறது – விலைவாசி உயர்வு குறித்து காங்கிரஸ் கண்டனம்

இந்தியாவில் சுமார் 26 கோடி குடும்பங்கள் உள்ளன. அதாவது ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் ஒன்றிய அரசு சராசரியாக 1,00,000 ரூபாய் பணத்தை பெட்ரோல், டீசல் வரி மூலம் வசூலித்துள்ளது. ஆனால் அதற்கு ஈடாக அந்த மக்களுக்கு என்ன கிடைத்தது என்று ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பெட்ரோல், டீசலுக்கு வரி செலுத்தியதற்கு ஈடாக என்ன பெற்றுள்ளோம் என உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள் என முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

படிப்படியாக தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை: 12 நாட்களில் ரூ. 7.20 உயர்வு

பாஜக, அதன் தேர்தல் வெற்றிகளை மக்களைக் கொள்ளையடிக்கும் உரிமையாகக் கருதுகிறது என காங்கிரஸ் கட்சி நேற்று (ஏப்ரல் 3) குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்