Aran Sei

`அரசு, டிஜிட்டல் மீடியாவை மட்டும் கட்டுப்படுத்தவில்லை’ – ஊடகவியலாளர் அபிநந்தன்

ணையவழிச் செய்தி நிறுவனங்களும் வீடியோக்களை ஸ்ட்ரீமிங் செய்யும் நிறுவனங்களும் தங்களின் அந்நிய நேரடி முதலீட்டை 26 சதவீதத்திற்குள் வைக்க வேண்டும் என்கிற முடிவு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே அமைச்சரவையால் எடுக்கப்பட்டுவிட்டது என்று ‘தி இந்து’ இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இணையவழிச் செய்தித்தளங்களையும் நெட்ஃபிளிக்ஸ், அமேசான் போன்ற வீடியோ ஸ்ட்ரீமிங் தளங்களையும், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் அதிகார எல்லைக்குள் கொண்டுவந்த நான்கு நாட்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஆன்லைனுக்கு கட்டுப்பாடு – கருத்துரிமையை பறிக்கும் செயல் – இயக்குனர் விஜய்வரதராஜ்

26 சதவீதத்திற்கும் குறைவான அந்நிய நேரடி முதலீடு பெறும் நிறுவனங்கள் கூட, அதன் இயக்குநர்கள் / பங்குதாரர்களின் பெயர்கள் மற்றும் முகவரிகளை அமைச்சகத்திற்குத்  தெரிவிக்க வேண்டும். மேலும், இந்த விவரங்கள் அனைத்தையும் ஒரு மாத காலத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

26 சதவீதத்திற்கும் அதிகமான அந்நிய நேரடி முதலீட்டைக் கொண்ட நிறுவனங்கள், அடுத்த ஆண்டு அக்டோபர் 15 ஆம் தேதிக்குள், அவற்றை 26 சதவீதமாகக் குறைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தி சினிமாவை விழுங்க முயற்சிக்கும் பாஜக

“டிஜிட்டல் மீடியாவைக் கைப்பற்றுவதற்கு அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த அறிவிப்புகள் மூலம், அவர்கள் எங்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்த விரும்புகிறார்கள் என்று எல்லோருக்கும் தெளிவாக தெரியும்.” என்று இணையச் செய்தித்தளமான நியூஸ் லாண்டரியின் இணை நிறுவனர் அபிநந்தன் சேக்ரி கூறியுள்ளதாக ‘தி இந்து’ தெரிவித்துள்ளது.

தேசியப் பத்திரிகை தினத்தை முன்னிட்டு இந்தியப் பத்திரிகை கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த இணைய வழிக் கருத்தரங்கம் ஒன்றில், தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேசியுள்ளார். “ஒரு நாட்டின் ஜனநாயகத்திற்குப் பத்திரிகைச் சுதந்திரம் முக்கியமானது” என்று அதில் அவர் கூறியுள்ளதாக ‘தி இந்து’ குறிப்பிட்டுள்ளது.

ஃபாசிஸ்ட் சினிமா – படம்காட்டி மக்களை ஏமாற்றி வந்த ஹிட்லர்

மேலும், “ஜனநாயகத்தின் ஆன்மாவான பத்திரிகைச் சுதந்திரம் மிகவும் முக்கியமானதுதான். ஆனால் எந்தவொரு சுதந்திரமும் பொறுப்புடன் இருக்க வேண்டும். வெறும் பரபரப்பு மட்டும் தேவை இல்லை.” என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், “செய்திகள் யாரையும் வேண்டுமென்றே அவதூறு செய்யும் விதமாக இருக்கக் கூடாது.” என்றும் குறிப்பிட்டுள்ளார்

ஓவர்-தி-டாப் (OTT) தளங்களுக்கு எந்தவொரு ஒழுங்குமுறை ஆணையங்களும் இல்லை என்றும் அதன் உள்ளடக்கத்தை எந்தெந்த விதிமுறைகளை அமைத்துக் கட்டுப்படுத்துவது என்பது குறித்தும் அரசு ஆலோசனை செய்து வருவதாக அவர் தெரிவித்துள்ளதாக ‘தி இந்து’ கூறியுள்ளது.

மாற்றுக் கருத்துகளை முடக்கும் செயல் – கேரள முதல்வர்

சமீபத்தில், அரசு சாரா அமைப்புகளுக்கான (என்ஜிஓ) வெளிநாட்டு நிதியுதவிகள் தொடர்பான Foreign Contribution (Regulation) Amendment Bill 2020 (FCRA) என அழைக்கப்படும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்தச் சட்டத்தில், ‘ஒவ்வொரு அரசு சாரா அமைப்பும் வெளிநாட்டு நிதியைப் பெற, அந்த அமைப்பின் தலைவரோ, இயக்குநரோ தங்கள் ஆதார் அடையாள அட்டையைக் கட்டாயம் சமர்ப்பிக்க வேண்டும். தங்கள் நிர்வாக ரீதியிலான செலவில் அதிகப்பட்சமாக 20 சதவீதமே வெளிநாட்டு நிதியில் இருந்து பெற்றுக்கொள்ள வேண்டும்.’ என்று கூறப்பட்டிருந்தது.

நசுக்கப்படுகிறதா என்.ஜி.ஓக்கள் – மத்திய அரசின் புதிய சட்டம்

இது அரசு சாரா அமைப்புகளுக்கும் சிறுபான்மையினருக்கும் எதிராக இருப்பதாகவும் மாற்றுக்கருத்து உள்ளோரை ஒழிக்கும் விதமாக உள்ளதாகவும் எதிர்க்கட்சிகளும் அரசு சாரா அமைப்புகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்