பாஜக அரசு ஒரு வருடத்திற்கு முன்பு தான் கொண்டு வந்த 3 வேளாண் சட்டங்களை ஒரு மாதத்திற்கு முன்பு திரும்பப் பெற்றுக்கொண்டதோடு, அதற்காக நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி மன்னிப்பும் கேட்டார். இந்த சம்பவம் நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு இப்போது நடைபெற்ற சண்டிகர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்துள்ளது.
பாஜக எதிர்ப்பு வாக்குகளைக் காங்கிரஸ் கைப்பற்றும் என்று கணிக்கப்பட்ட நிலையில், முதல் முறையாக இந்தத் தேர்தலில் பங்கேற்ற ஆம் ஆத்மி கட்சி தேர்தல் நடைபெற்ற 35 இடங்களில் 14 இடங்களில் வெற்றி பெற்று அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
ஆளும் பாஜக அரசு வெறும் 12 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது. காங்கிரஸ் 8 இடங்களும் சிரோமணி அகாலி தளம் ஒரு இடத்திலும் வென்றுள்ளது.
தமிழ்ப்படங்களுக்கு முன்னுரிமை வேண்டும் – இயக்குனர் சீனு ராமசாமி கோரிக்கை
3 வேளாண் சட்டங்களை பாஜக ரத்து செய்த பிறகு வட இந்தியாவில் நடைபெற்ற முதல் தேர்தல் இதுவாகும். இந்த உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் உத்திரபிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களின் முடிவில் குறிப்பிடத்தக்கத் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சண்டிகரில் மேயரின் பதவிக்காலம் ஓராண்டு காலம்தான். ஆகவே ஒவ்வொரு ஆண்டும், பதவியில் இருக்கும் உறுப்பினர்கள் புதிய மேயரை தேர்ந்தெடுக்கின்றனர்.
2016 இல் நடைபெற்ற சண்டிகர் உள்ளாட்சித் தேர்தலில் பாஜகவுக்கு மிகப்பெரிய பெரும்பான்மை கிடைத்தது. அப்போது தேர்தல் நடைபெற்ற 26 இடங்களில் 21 இடங்களை பாஜக வென்றது. இப்போது அந்த 26 இடங்கள் 35 இடங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த மேயர் பதவிக்காக பாஜகவிற்குள் தொடர்ந்து நிறைய உட்கட்சிப் பூசல்கள் இருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.
நிதி ஆயோக் வெளியிட்ட சுகாதார அளவீடு – கேரளா முதலிடம், பாஜக ஆளும் உத்தரபிரதேசம் கடைசி இடம்
யூனியன் பிரதேசமாக சண்டிகர் இருப்பதால், நேரடியாக பாஜக ஆளும் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது. 2014 ஆம் ஆண்டு முதல் இந்நகரத்தின் நாடாளுமன்ற உறுப்பினராக பாஜகவைச் சேர்ந்த நடிகர் கிரோன் கெர் தான் உள்ளார்.
இந்தத் தேர்தல் தோல்விக்குப் பிறகு சண்டிகர் மேயர் பதவிக்கு பாஜக கட்சி உரிமை கோராது என்று சண்டிகர் பாஜக தலைவர் அருண் சூட் கூறியுள்ளார்.
காங்கிரஸின் பல தலைவர்கள் ஆம் ஆத்மி கட்சிக்கு மாறியது சண்டிகரில் ஆம் ஆத்மி கட்சியின் வெற்றிவாய்ப்பைப் பிரகாசமாக்கியது. சண்டிகரில் 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி பெற்ற வாக்கு சதவீதம் வெறும் 3.8% மட்டுமே பெற்றது. ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலில் அது 27% ஆக அதிகரித்துள்ளது.
காந்தியை கொன்ற கோட்சேவுக்கு தலைவணங்குகிறேன் – இந்துத்துவ சாமியார் காளிச்சரண் சர்ச்சை பேச்சு
பாஜகவுக்கு எதிரான வாக்குகளை சண்டிகர் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸால் பெற முடியவில்லை
சண்டிகர் தேர்தலில் ஆம் ஆத்மியின் வருகை, காங்கிரஸ் வாக்குகளைக் குறைத்து, பாஜகவின் வெற்றிக்கு வழி வகுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஆம் ஆத்மி கட்சி பாஜக எதிர்ப்பு வாக்குகளை அதிகம் அறுவடை செய்துள்ளது.
Source: the wire
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.