Aran Sei

கார்ப்பரேட்டுகளுக்கு நாட்டைக் கூறுபோட்டு விற்கும் வெகுமக்கள் விரோத பட்ஜெட் – திருமாவளவன் கண்டனம்

பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் மயமாக்குவது மட்டுமின்றி பொதுத்துறை நிறுவனங்களின் சொத்துகளையும் விற்கப்போவதாக நிதி அமைச்சர் இந்த பட்ஜெட்டில் அறிவிப்புச் செய்துள்ளார்.பல ஆண்டுகளாக உருவாக்கப்பட்ட நாட்டின் வளங்கள் அனைத்தையும் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கும் மக்கள் விரோத பட்ஜெட் இது என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய அரசு வெளியிட்ட பட்ஜட் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வேளாண்துறை கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான கூடுதல் வரி (செஸ்)ஏழை எளிய மக்கள் பயன்படுத்தும் சமையல் எண்ணெய், பருப்பு வகைகள்மீது தாங்கமுடியாத அளவுக்கு வரிச்சுமையை ஏற்றுகிறது. நாட்டை விலைபேசி விற்பதாகவும், மக்களின்மீது வரிச்சுமையைக் கூட்டுவதாகவும் உள்ள இந்த பட்ஜெட்டுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வன்மையான கண்டனத்தைத் தெரிவிப்பதாகவும்” அவர் கூறியுள்ளார்.

மியான்மர் இராணுவப் புரட்சி – ஆட்சிகள் மாறியும் காட்சிகள் மாறவில்லை

வேளாண் சட்டங்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் போராடிக்கொண்டிருக்கும் நிலையில் யூரியா மீது கூடுதல் வரியை விதித்து மேலும் அவர்களை வாட்டிவதைக்க முடிவு செய்திருக்கிறது இந்த அரசு என்றும் மின்விநியோகத்தைத் தனியாரிடம் கொடுப்பதென்ற முடிவு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கான தொடக்கம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

“எல்ஐசியின் பங்குகளை விற்கப் போவதாகக் கடந்த பட்ஜெட்டில் அறிவித்தார்கள். இப்போது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அனைத்திலும் 74% அந்நிய நேரடி முதலீட்டை அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளார்கள். எஸ்சி எஸ்டி மக்களுக்கான சிறப்புக் கூறுகள் திட்டத்தை முற்றாகக் கைவிட்டுவிட்ட பாஜக அரசு, அவர்களுக்கான ஒதுக்கீட்டையும் கணிசமாகக் குறைத்துவிட்டது. எஸ்சி மாணவர்களுக்கு ‘போஸ்ட்மெட்ரிக் ஸ்காலர்ஷிப்’ திட்டத்தைக் கைவிட பாஜக அரசு முடிவுசெய்தபோது அதை எதிர்த்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மட்டும்தான் போராடியது. அதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு அந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.” என்றும் திருமாவளவன் குறிப்பிட்டுள்ளார்.

’பொதுத்துறை நிறுவனங்களை திவாலாக்கி, அவற்றை தனியார்மயமாக்கும் மத்திய அரசு’ – பட்ஜட் குறித்து காங்கிரஸ் விமர்சனம்

பாஜக அரசு ஆரவாரத்தோடு அறிவித்திருக்கும் ‘தேசிய கல்விக்கொள்கையை’ நடைமுறைப்படுத்த ‘ஜிடிபி’யில் 6% ஒதுக்கப்படும் எனக் கூறியிருந்த்தாக குறிப்பிட்ட அவர்.  அதில் பாதியளவுகூட இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதாகத் தெரியவில்லை என்றும் உயர்கல்வி முழுவதையும் மத்திய அரசின் கையில் எடுத்துக்கொள்வதறாகன அறிவிப்பே இந்த பட்ஜெட்டில் செய்யப்பட்டுள்ளது என்றும்

இந்தியா முழுவதும் சுமார் 24 கோடி பேர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களில் பெரும்பாலோர் தலித் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்தவர்களை முற்றிலுமாக இந்த பட்ஜெட்டிலும் ஒதுக்கி வைத்துவிட்டது என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றினால் அதிகம் பாதிக்கப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர் நலன்களுக்காகவும்கூட எந்தவொரு அறிவிப்பும் இல்லை என்றும் மத்திய அரசின் பட்ஜட் குறித்து தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

’ஒருபக்கம் சுயசார்பு இந்தியா; மறுபக்கம் அந்நிய முதலீட்டுக்கு பட்டுக் கம்பளம்’ – பட்ஜெட் குறித்து முத்தரசன்

பற்றாக்குறையை சமாளிக்கவே நாட்டின் சொத்துகளை விற்கவும், மக்கள்மீது ‘கூடுதல் வரி’ விதிக்கவும் இந்த அரசு முடிவுசெய்துள்ளதாகவும், இந்த பட்ஜெட்டின்மூலம் நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி அதிகரிக்குமேயொழிய குறையாது என்றும் வழக்கம்போல வெகுமக்கள் விரோத பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள பாஜக’வின் கார்ப்பரேட் அரசுக்கு கடுமையான கண்டனத்தை தெரிவித்துக்கொள்வதாக பாராளுமன்ற மக்களவை உறுப்பினரும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவருமான திருமாவளவன் பட்ஜட் குறித்து தெரிவித்துள்ளார்.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்