Aran Sei

பசு மாடுகளை கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக பேரணி – தெலங்கானாவில் 8 பேர் கைது

தெலங்கானாவின் சித்திபேட் பகுதியில், பசு மாடுகளைக் கொன்றதாக 8 பேரை காவல்துறை கைது செய்திருப்பதாக, தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

சித்திபேட் பகுதியில் வெள்ளிக்கிழமை 16 பசு மாடுகள் அடையாளம் தெரியாத நபர்களால் கொல்லப்பட்டதை  கண்டித்து பாஜக, ஏபிவிபி (ஆர்எஸ்எஸ் அமைப்பின் மாணவர் அமைப்பு) மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் பேரணி நடத்தியதை அடுத்து, பதற்றத்தை தவிர்க்க காவல்துறையினர் 144 தடை உத்தரவை பிறப்பித்திருப்பதாகவும், அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 16 பசுமாடுகளை அடையாளம் தெரியாதவர்கள் கொன்றதை அடுத்து, அன்று மாலை சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர், அங்கு உயிருடன் இருந்த பசுக்களை மீட்டு கோசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

பிரேத பரிசோதனை முடிந்து மாடுகளை அந்த இடத்திலேயே அடக்கம் செய்த காவல்துறையினர், பல்வேறு தனிப்படைகளை அமைத்து 6 மணிநேரத்தில் 8 பேரை கைது செய்திருப்பதாக தி இந்து தெரிவிக்கின்றது.

“ஏற்றுமதிக்காக மட்டுமே விவசாய உற்பத்தி” – வேளாண் சட்டங்கள் கூறும் புதிய விளக்கம்

இது தொடர்பாக பேசிய, காவல்துறை ஆணையர் டி.ஜோயல் டேவிஸ், கரிம்நகர் மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட 68 மாடுகளில் 16 மாடுகள் கொல்லப்பட்டதை அடுத்து மீதிமிருந்த 52 மாடுகளைக் கோசாலைக்கு அனுப்பியதாகவும், இந்தச் சம்பவம் தொடர்பாக இந்திய தண்டனை சட்டம் 423, 153 மற்றும் 153ஏ ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முகமது ஜாபர், முகமது கஹாஜா, முகமது சதாம், முகமது அராபத், முகமது ரஹீம், முகமது அர்ஷத், முகமது அஷ்ரப், முகமது ஜாவேத் ஆகியோர் மீது குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டிருப்பதாகவும் தி இந்து தெரிவித்துள்ளது.

பீகார் விவசாயிகளின் துயரமும், இந்திய விவசாயிகள் எதிர்நோக்கியுள்ள அபாயமும் – எம்.என்.பர்த்

குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு 14 நாள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டிருப்பதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்