Aran Sei

ஒரு துறவி முதலமைச்சராக இருக்க முடியாது – யோகி ஆதித்யநாத் குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த்

ரு துறவி மதச்சார்பின்மையை ஏற்பதாக முதலமைச்சரின் உறுதி மொழியை எடுத்துக்கொண்ட பிறகு, மதப்பற்றாளராக இருக்க முடியாது என உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை வெளிப்படையாகக் குறிப்பிட்டு பேசியுள்ள சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த், ஒரு துறவி முதலமைச்சராக இருக்க முடியாது என்று கூறியுள்ளார்.

கோரக்பூரில் உள்ள கோரக்நாத் கோவிலின் மஹந்த்தாகவும்(தலைமை பூசாரி) துறவியாகவும் உள்ள உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் குறித்த கேள்விக்கு சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் இக்கருத்தை தெரிவித்துள்ளார்.

நேற்று(ஜனவரி 24), ப்ரயக்ராஜ் மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியுள்ள அவர், “எந்தவொரு மனிதனும் இரண்டு உறுதிமொழிகளுக்குக் கட்டுப்பட முடியாது. ஒரு துறவி மஹந்த்(கோவிலின் தலைமை பூசாரி) ஆக முடியும். ஆனால், முதலமைச்சராகவோ அல்லது பிரதமராகவோ இருக்க முடியாது. இது இஸ்லாத்தில் உள்ள கிலாபத் அமைப்பில் சாத்தியமாகும். இதில் ஒரு மதத் தலைவர் அரசனாக இருக்க முடியும்” என்று கூறியுள்ளார்.

‘அயோத்தியில் யோகி ஆதித்யநாத் களமிறக்காதது நல்லதே’- கடும் எதிர்ப்பிருப்பதாக ராமர் கோயில் பூசாரி தகவல்

உத்தரப் பிரதேசத்தில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து சுவாமி அவிமுக்தேஷ்வரானந்த் கூறுகையில், “ஆட்சி அமைந்த பிறகு மக்கள் மனம் வருந்தாமல் இருக்க சரியான நேரத்தில் சரியான கட்சியை, சரியான பிரதிநிதியை மக்கள் தேர்வு செய்ய வேண்டும். தவறானவர்களைத் தேர்வு செய்துவிட்டு, பின்பு தவறு செய்துவிட்டோம் என வருந்தக்கூடாது. இனி வரும் தேர்தல்களிலும் மக்கள் அதே தவறை செய்யக்கூடாது” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source: PTI

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்