Aran Sei

பதவி உயர்வுகளில் எஸ்சி/எஸ்டி ஒதுக்கீடு – உச்சநீதிமன்ற வழக்கில் புதிய உத்தரவு

credits : the indian express

தவி உயர்வுகளில் பட்டியல் இனத்தவருக்கான இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயர் கொள்கையை அமல்படுத்துவது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் அரசு தலைமை வழக்கறிஞருக்கு புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது என்று தி ஹிந்து செய்தி தெரிவிக்கிறது.

2006-ம் ஆண்டில் நாகராஜ் வழக்கில், பதவி உயர்வுகளில் பட்டியல் இனத்தவருக்கும் பழங்குடி இனத்தவரின் கிரீமி லேயரைச் சேர்ந்தவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கக் கூடாது என்று, உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வு ஒன்று தீர்ப்பு கூறியிருந்தது.

பட்டியல் இனத்தவர்/பழங்குடியினர் இட ஒதுக்கீட்டுக்கு பயன்படுத்தியதன் மூலம் கிரீமி லேயர் கொள்கையை நாகராஜ் தீர்ப்பு தவறாக புரிந்து கொண்டுள்ளது என்று மத்திய அரசு மேல்முறையீடு செய்திருந்தது.

இந்தக் கேள்வியை பரிசீலித்து முடிவு செய்ய 7 நீதிபதிகள் கொண்ட ஒரு அரசியலமைப்புச் சட்ட அமர்வை உருவாக்கும்படி மத்திய அரசு முறையீடு செய்த மனுவின் மீது உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வருகிறது. 2006-ம் ஆண்டு தீர்ப்பை எதிர்த்து பல்வேறு மாநிலங்களும் மேல் முறையீடு மனுக்களை தாக்கல் செய்துள்ளன.

செப்டம்பர் 2018-ல், ஜர்னயில் சிங் வழக்கில் உச்சநீதிமன்றம் 2006 நாகராஜ் தீர்ப்பை மீண்டும் உறுதி செய்துள்ளது என்பதும் அதனை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்ற மறுத்து விட்டதும் குறிப்பிடத்தக்கது.

மாநிலங்கள் எழுப்பும் பிரச்சினைகள் பொதுவானவை இல்லை என்று கூறிய தலைமை நீதிபதி போப்டே தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு, ஒவ்வொரு மாநிலத்துக்கான வழக்கறிஞரும் அந்த மாநிலம் தொடர்பான பிரச்சினைகளின் பட்டியலை தலைமை வழக்கறிஞருக்கு 2 வாரங்களுக்குள் கொடுக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்தப் பிரச்சினைகள் அனைத்தையும் தொகுக்கும்படி உச்சநீதிமன்றம் தலைமை வழக்கறிஞர் கே கே வேணுகோபாலிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்