Aran Sei

ஹத்ராஸ் – நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை : உச்சநீதி மன்றம் உத்தரவு

த்தர பிரதேசம் ஹத்ராசில் 19 வயதான பெண் கும்பல் பாலியல் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தொடர்பான மனுக்கள் மீது தீர்ப்பு கூறிய உச்சநீதி மன்றம் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கு ஒரு வாரத்துக்குள் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது என்று லைவ் லா செய்தித் தளம் தெரிவிக்கிறது.

ஹத்ராசைச் சேர்ந்த 19 வயதான தலித் பெண் மேல் ஆதிக்க சாதியைச் சேர்ந்த 4 ஆண்களால் செப்டம்பர் 14 அன்று கும்பல் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் பிறகு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி 15 நாட்களுக்குப் பிறகு உயிரிழந்தார்

ஹத்ராஸ்: சாதிய, பெண் விரோதப் பாரம்பரியங்களின் குவியல் : உண்மை அறியும் அறிக்கை

பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலை உத்தர பிரதேச போலீஸ் அவசர அவசரமாக அவரது கிராமத்துக்கு எடுத்துச் சென்று நள்ளிரவில் எரியூட்டியது. அவரது குடும்பத்தினரை அவர்களது வீட்டில் அடைத்து வைத்து அவர்களது ஒப்புதல் இல்லாமல் போலீஸ் இதைச் செய்தது.

இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் எழுந்த கடும் கண்டனத்தைத் தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றியது, உத்தர பிரதேச அரசு.

ஹத்ராஸ் கொடூரம் – விசாரணையை தொடங்கியது சிபிஐ

பாலியல் வல்லுறவு நடக்கவில்லை என்றும், பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தினரே தமது பெண்ணை ஆணவக் கொலை செய்து விட்டதாகவும் பாஜகவினரும் உத்தர பிரதேச போலீசும் அவதூறு பிரச்சாரம் செய்தனர்.

ஹத்ராஸ் சம்பவம்: உ.பி.காவல்துறையின் கூற்றுக்கு முரணாகக் கருத்து தெரிவித்த அரசு மருத்துவர் பதவி நீக்கம்

உத்தர பிரதேச போலீஸ் இந்த வழக்கு தொடர்பான புலன் விசாரணையை சொதப்பி விட்டதால், வழக்கு உத்தர பிரதேசத்தில் நியாயமாக நடத்தப்படாது என்றும் அதை மாநிலத்துக்கு வெளியில் மாற்ற வேண்டும் என்றும் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது.

உபி காவல் துறையின் செயல்பாடுகள் “மாநிலக் காவல்துறைக்கும் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கும் இடையிலான தெளிவான தொடர்பைக் குறிக்கிறது” என்றும் “உபி மாநிலக் காவல்துறை மற்றும் மாநில அரசாங்க அதிகாரிகள் முறைகேடாக ஆதாரங்களை அழித்தல் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களைக் காப்பாற்றுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரிகிறது,” என்றும் “காவல் அதிகாரிகள் குற்றத்தை விசாரிப்பதை விட அதை மறைப்பதில் ஈடுபட்டுள்ளனரோ என்று சந்தேகமாக உள்ளது,” என்றும் மனுக்களில் குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஹத்ராஸ் தீர்ப்பு ஒத்திவைப்பு – `குற்றவாளிகளைக் காப்பாற்றும் காவலர்கள்’

“மாநில போலீஸ் மீது எந்தக் குற்றச்சாட்டையும் வைக்காமல், எல்லா கவலைகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, நம்பிக்கை ஊட்டும் நடவடிக்கையாக மட்டும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்துக்கும் சாட்சிகளுக்கும் சிஆர்பிஎஃப் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்” என்று இந்த மனுக்கள் மீது உத்தரவிடுவதாக தலைமை நீதிபதி எஸ்ஏ போப்டே தலைமையிலான அமர்வு கூறியுள்ளது என்று லைவ்லா தெரிவிக்கிறது.

ஹத்ராஸ் வழக்கின் மீதான சிபிஐ விசாரணை அலகாபாத் உயர்நீதி மன்ற கண்காணிப்பில் நடத்தப்பட வேண்டும் என்றும் உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சிபிஐ உயர்நீதி மன்றத்தின் வழிகாட்டலின்படி அவ்வப்போது விசாரணை தொடர்பான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

“உள்ளூர் போலீஸ் விசாரணையில் இருந்து விலக்கப்பட்டு சிபிஐயிடம் ஒப்படைக்கப்பட்டிருப்பதால், புலன் விசாரணை முடிந்த பிறகு, இந்த வழக்கு உத்தர பிரதேசத்துக்கு வெளியில் நடத்தப்படுவது பற்றி முடிவு செய்யப்படும்” என்று நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

பாதிக்கப்பட்ட பெண்ணுடன் அவரது குடும்ப உறுப்பினர்களின் உறவுகள் பற்றிய விபரங்களைக் குறிப்பிடும் உத்தரவை அலகாபாத் உயர்நீதி மன்றம், அந்த விபரங்களை நீக்கி விடவும், டிஜிட்டல் பதிவுகளில் அவற்றை மறைக்கவும் செய்யும்படி கேட்டுக் கொள்வதாகவும், எதிர்காலத்தில் அத்தகைய விபரங்களை வெளியிடுவதை தவிர்க்கும்படி அறிவுறுத்துவதாகவும் உச்சநீதி மன்றம் கூறியிருக்கிறது.

 

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்