Aran Sei

விவசாயிகளின் போராட்டம் கொரோனா மையமாக மாறிவிடுமா? – உச்ச நீதிமன்றம் கவலை

credits : pti

டந்த ஆண்டு மார்ச் மாதம், கொரோனா தொற்று பரவ தொடங்கிய நேரத்தில், அரசு அமல்படுத்திய ஊரடங்கினால் டெல்லியில் வசித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள் தங்களுடைய சொந்த ஊருக்கு செல்ல நேர்ந்தது. இதனால் அவர்கள் டெல்லியின் ஆனந்த் விகார் பஸ் நிலையத்தில் அதிக அளவில் கூடினர்.

கொரோனா நோய்த்தொற்று பரவ தொடங்கிய காலத்தில் மக்கள் அதிக அளவில் கூடுவதை டெல்லி காவல்துறை தடுக்க தவறியது பற்றியும், டெல்லி நிஜாமுதின் மர்காஸ் மசூதியில் நடந்த தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துக்கொள்ள பல்வேறு மாநிலங்களிலிருந்தும் நாடுகளிலிருந்தும் மக்கள் வந்தது தொடர்பாகவும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வழக்கறிஞர் சுப்ரியா பண்டிதா மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே ”என்ன நடக்கிறது என்பதை நீங்கள் (மத்திய அரசு) எங்களிடம் சொல்ல வேண்டும். விவசாயிகளின் போராட்டத்திலும் இதே (கொரோனா பரவல்) பிரச்சினை எழப்போகிறது. விவசாயிகள் கொரோனாவிலிருந்து பாதுகாக்கப்படுகிறார்களா?” என்று கேள்வியெழுப்பியுள்ளதாக தி இந்து செய்தி வெளியிட்டுள்ளது.

தப்லிகி ஜமாத் மீதான வெறுப்பு அரசியல் – பாஜகவும் இனவாத ஊடகங்களும்

இதற்கு பதிலளித்த அரசு தலைமை வழக்கறிஞர் துஷார் மேத்தா, கொரோனா நோய்த்தொற்று பரவாமல் இருப்பது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள விதிமுறைகளை விவசாயிகள் பின்பற்றவில்லை என பதிலளித்துள்ளார். இது தொடர்பான அறிக்கையை இன்னும் இரண்டு வாரங்களில் சமர்ப்பிப்பதாக மேத்தா தெரிவித்துள்ளார்.

தப்லிகி ஜமாத் வழக்கு – சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் தவிக்கும் கர்ப்பிணிப் பெண்

இந்நிலையில் மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஒம் பிரகாஷ் பரிஹர், தப்லிகி ஜமாத் மாநாடு நடைபெற்ற, டெல்லியின் நிஜாமுதீன் மர்காசின் தலைவர் மெளலானா சாத் இருக்கும் இடம் குறித்து காவல்துறை எதுவும் சொல்லவில்லை என நீதிபதிகளிடம் முறையிட்டுள்ளார்.

‘இம்மியளவும் ஆதாரம் இல்லை’ – தப்லிகி ஜமாத் உறுப்பினர்கள் விடுதலை

இதற்கு பதிலளித்த நீதிபதிகள் “நீங்கள் ஏன் ஒரு நபர் மீது இவ்வளவு ஆர்வம் காட்டுகிறீர்கள். நாம் இப்போது கொரோனா பிரச்சினையில் இருக்கிறோம். கொரோனா விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்பதில் ஆர்வமாக உள்ளோம். நீங்கள் ஏன் சர்ச்சை செய்ய விரும்புகிறீர்கள்?” என்று அவரை கடுமையாக சாடியதாக தி இந்து தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைக் களமாக மாறியுள்ளது இந்தியா – ஆய்வு முடிவு

கொலை முயற்சி, விசா விதிகளை மீறுதல், கொரானா ஊரடங்கு காலத்தில் போடப்பட்ட விதிகளை மீறுதல் போன்ற பல குற்றச்சாட்டுகளை முன் வைத்து தப்லிகி ஜமாத் மாநாட்டில் கலந்துக் கொண்டவர்கள் மீது இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட பெரும்பான்மையான வழக்குகள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்