Aran Sei

’விவசாயிகளுடனான பேச்சு வார்த்தையில் எந்த முன்னேற்றமும் இல்லை’ – உச்ச நீதிமன்றம் கவலை

விவசாய சட்டங்களை நீக்க கோரி டெல்லியில் நடந்து வரும் போராட்டத்தை முடித்து வைப்பதற்கு நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படாமல் உள்ளது என்று உச்ச நீதிமன்றம் தன் ஏமாற்றத்தை பதிவு செய்துள்ளது.

கடந்த டிசம்பர் 31-ம் தேதி அரசுடன் நடத்தப்பட்ட 6-ம் கட்ட பேச்சுவார்த்தையில் விவசாயிகள் முன்மொழிந்த நான்கு கோரிக்கைகளில் இரண்டில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

மத்திய அரசுடன் விவசாயிகள் நடத்திய 7-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி

ஆனாலும், இரண்டு முக்கிய கோரிக்கைகளான மூன்று விவசாய சட்டங்களை ரத்து செய்தல் மற்றும் விவசாய உற்பத்திக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைகளுக்கு சட்ட உத்தரவாதம் வழங்குதல் ஆகியற்றிற்கு தீர்வு எட்டப்படாமல் இருந்தது.

இந்த இரண்டு கோரிக்கை குறித்தும் கடந்த 3 ஆம் தேதி நடந்த ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையில் விவாதிக்கப்பட்டு தீர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்துள்ளது.

7-ம் கட்ட பேச்சுவார்த்தை – விவசாய சங்கங்கள் சொல்வது என்ன?

வரும் ஜனவரி 26 ஆம் தேதிக்குள் மூன்று விவசாயச் சட்டங்களும் திரும்ப பெறப்படவில்லை எனில், குடியரசு தின அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு இந்தியா முழுமையிலும் இருந்து ஆயிரக்கணக்கான விவசாயிகள் ட்வருகை புரிவார்கள் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், மத்திய அரசு கொண்டு வந்த விவசாய சட்டங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு, இன்று (ஜனவரி 6) மீண்டும் நீதிபதி எஸ் ஏ போப்டேக்கு முன் விசாரனைக்கு வந்தது.

மத்திய அரசோடு பேச்சுவார்த்தைக்குத் தயார் : நான்கு அம்ச கோரிக்கையை முன்மொழியும் விவசாய சங்கங்கள்

அப்போது, “உச்ச நீதிமன்றத்தின் நோக்கம் விவசாயிகளுக்கும் மத்திய அரசிற்கும் இடையேயான பேச்சு வார்த்தையை ஊக்கப்படுத்துவது தான். ஆனால், இதுவரை இந்த பேச்சு வார்த்தைகளால் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.” என்று நீதிபதி எஸ் ஏ போப்டே கூறியுள்ளதாக என்டிடிவி தெரிவித்துள்ளது.

மேலும், மத்திய அரசு சார்பில் வாதம் செய்த கே கே வேணுகோபால், “நாங்கள் விவசாயிகளிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். விவசாயிகள் தரப்பிற்கும் அரசு தரப்பிற்கும் இடையே ஒரு புரிதல் வர தொடங்கியிருக்கிறது.” என்று வாதிட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த சாய்நாத் தலைமையில் குழு? – இதற்கு சாய்நாத்தின் பதில் என்ன?

விசாரனையை வரும் திங்கள்கிழமைக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.

சமீபத்தில் தோல்வியடைந்த ஏழாவது கட்ட பேச்சு வார்த்தையில் பங்கேற்ற விவசாயிகள் சங்க தலைவர் சார்வான் சிங் பாந்தர், “பேச்சு வார்த்தையில் கலந்துக்கொண்ட மத்திய விவசாய துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், விவசாய சட்டங்களைத் திரும்ப பெற மாட்டோம் என்று உறுதியாக சொல்லிவிட்டார். உங்களுக்கும் வேண்டுமென்றால், உச்ச நீதிமன்றத்தை நாடுங்கள் என்கிறார்.” என்று என்டிடிவி-யிடம் கூறியுள்ளார்.

” போராடுவது அடிப்படை உரிமை, கட்டுப்படுத்தவோ மட்டுப்படுத்தவோ முடியாது” – உச்சநீதிமன்றம்

கடந்த மாதம், போராடும் விவசாயிகளை டெல்லி எல்லையிலிருந்து நீக்கக் கோரும் பொதுநல மனுவின் மீது, இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்