Aran Sei

’‘ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் வகுப்பு’- இந்தி பேசாத ஊழியர்கள் புரியாமல் தவிப்பதாக சு.வெங்கடேசன் குற்றச்சாட்டு

யில்வே மருத்துவமனை நிர்வாக தகவல் அமைப்பு குறித்து ரயில்வே மருத்துவமனை ஊழியர்களுக்கு இந்தியில் மட்டும் இணைய வகுப்பு நடத்துவதை கண்டித்து ஒன்றிய ரயில்வே அமைச்சருக்கும் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக, இன்று(அக்டோபர் 24), அக்கடிதத்தில் சு.வெங்கடேசன் கூறியுள்ளதாவது, “ரயில்வே மருத்துவமனைகளில் புதிய நிர்வாக தகவல் அமைப்பு முறை அமல் படுத்துவதற்காக அதன்மீது மருத்துவ ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்க ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. அந்தப் பயிற்சி அக்டோபர் 21 முதல் 29 வரை இணையவழி நடைபெறுகிறது. இதில் பயிற்று மொழி இந்தி மட்டுமே பயன்படுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

அரசியலோ அரசியல் – காங்கிரஸின் தந்திர நடவடிக்கை

“இதனால் இந்தி பேசாத மாநிலங்களில் உள்ள ஊழியர்கள் ஒன்றும் புரியாமல் தவிக்கிறார்கள். பயிற்சியும் பயனற்றுப் போகிறது. குறிப்பாக தமிழகத்தில் பணியாற்றும் மருத்துவ ரயில்வே ஊழியர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே இந்தப் பயிற்சியை இந்தியில் மட்டும் நடத்துவதை நான் கண்டிக்கிறேன். அதனை தமிழிலும் அதைப் போன்று இந்தி இல்லாத மொழிகளிலும் நடத்த வேண்டும்” என்று அவர் கோரியுள்ளார்.

அழிவை நோக்கிச் செல்கின்றனவா அம்மா உணவகங்கள்? – கமல்ஹாசன் கேள்வி

மேலும், “அதற்கு உடனடியாக வாய்ப்பு இல்லை என்றால் குறைந்தபட்சம் ஆங்கிலத்தில் தனியாக இணையவழி வகுப்பு ஏற்பாடு செய்திட கோருகிறேன். அதுவரை இந்தி பேசாத மாநில ஊழியர்கள் இந்த வகுப்பில் கலந்து கொள்ள விதிவிலக்கு அளிக்க வேண்டும்” என்று நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்