Aran Sei

தடுப்பூசிக்கு அவசர அனுமதி – சு.வெங்கடேசன் சொல்லும் காரணம் என்ன?

ராஜேஷ் பூஷண்

கொரோனா தடுப்பூசிக்கு அவசர கால அனுமதி வழங்கப்பட்ட நாளிலிருந்து 10 நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என்று மத்திய சுகாதாரத் துறை செயலர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, நேற்று (ஜனவரி 5) அவர் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது, “அவசர கால பயன்பாட்டிற்காக மத்திய அரசு அனுமதி வழங்கிய நாளிலிருந்து 10 நாட்களில் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரும். இறுதி முடிவை அரசே எடுக்கும்.” என்று கூறியுள்ளதாக ஏஎன்ஐ செய்தி நிறுவனம்  தெரிவித்துள்ளது.

தடுப்பூசிகள் உலகளாவிய பொது சுகாதாரத்துக்கு நன்மை ஏற்படுத்தும் : சீரம் மற்றும் பாரத் பயோடெக் இணைந்து கூட்டறிக்கை

“தடுப்பூசி வழங்குவதில் முதலில் முன்களப் பணியாளர்களுக்கே முன்னுரிமை என்று ஏற்கெனவே கூறப்பட்டிருந்தது. அவர்கள் யாரும் பயனாளர்கள் எனத் தங்களைத் தாங்களே பதிவு செய்துகொள்ளத் தேவையில்லை. ஏனென்றால், அவர்களின் முழுவிவரமும் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. கோ-வின் தடுப்பூசி வழங்கல் ஆவணக் காப்பகத்தில் முன் களப்பணியாளர்களின் விவரங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. தடுப்பூசிக்கானவர்களை தேர்வு செய்யும் பணி டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது.” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், “இந்தியாவில் கொரோனா பரவல் குறைந்து வருகிறது. தொடர்ந்து தொற்று எண்ணிக்கை 2.5 லட்சத்தின் கீழ் இருக்கிறது. மருத்துவமனையில் உள்ள தொற்றாளர்களில் 44 சதவீத பேருக்கு தீவிரமான அறிகுறியும் 56 சதவீத பேருக்கு மிக லேசான அறிகுறியும் இருக்கிறது.” என்று குறிப்பிட்டுள்ளதாக ஏஎன்ஐ தெரிவித்துள்ளது.

இந்தியாவில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி – உண்மையில் இது முழுமையான இந்திய தயாரிப்பா?

அனுமதி வழங்கப்பட்ட கொரோனா தடுப்பூசி குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரித்துள்ளார். அதில், “இந்தியாவில் அவசரகதியில் கொரோனா தடுப்பூசிக்கான அனுமதி வழங்கபட்ட நிலையில், இரண்டு தடுப்பூசிகளில் ஒன்றான கோவிஷீல்டை தயாரிக்கும் சீரம் இன்ஸ்டிட்யூட் என்கிற நிறுவனம் பல வருடங்களாக கோடி கணக்கில் பாஜகக்கு நிதி வழங்கி‌ இருப்பதை myneta.info என்கிற இணையதளத்தில் காணலாம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

ட்வீட்டுடன் சீரம் நிறுவனம் நிதி வழங்கியதற்கான ஆதாரம் என்று ஒரு படத்தையும் இணைத்துள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்