Aran Sei

ஹிஜாப் தடையால் தேர்வு எழுதாத மாணவர்கள் – மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு அறிவிப்பு

குப்பறைக்குள் மத ரீதியிலான உடைகளை அணிந்து வரக் கூடாது என்று கர்நாடக உயர்நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையின் போது தேர்வுகளை தவறவிட்ட இஸ்லாமிய மாணவிகளுக்கு மறுதேர்வு நடத்த முடியாது என்று கர்நாடக அரசு கூறியுள்ளது.

கல்வி வளாகங்களுக்குள் ஹிஜாப் அணிந்து வரக் கூடாது என்ற கர்நாடக அரசின் உத்தரவை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில், இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடர்ந்திருந்தனர். நீதிமன்றத்தின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வரும் என்று பல இஸ்லாமிய மாணவர்கள் தங்களது தேர்வுகளைத் தவிர்த்திருந்தனர்.

ஹிஜாப் அணிந்ததால் சக மாணவர்கள் என்னை தனிமைப்படுத்தினர் – கராத்தே சாம்பியன் அலியா அசாதி வேதனை

தேர்வு எழுதாத காரணத்தால், தேர்ச்சி பெற முடியாமல் போன மாணவர்களுக்கு மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற மாணவர்களின் கோரிக்கையைக் கர்நாடக அரசு நிராகரித்துள்ளது.

ஹிஜாப் அணியாமல் நாங்கள் மீண்டும் வகுப்பறைக்குள் நுழைய மாட்டோம் என்று ஹிஜாப் தடைக்கு எதிராக மனுத் தாக்கல் செய்த மாணவிகள் தெரிவித்துள்ளனர்.

Source : The Hindu

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்