Aran Sei

மதத்தின் பேரில் மக்களைத் துண்டாடுவதை நிறுத்துங்கள்- காங்கிரஸ் எம்எல்ஏ

டந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் செலுத்துவதாக உறுதியளித்ததை, மோடி அரசு ஏன் இன்னும் நிறைவேற்றாமல் வைத்திருக்கிறது என்று சங்கரெட்டி சட்டசபை உறுப்பினர் டி.ஜெயபிரகாஷ் ரெட்டி, தெலுங்கானா மாநில பாஜக தலைவர் பாண்டி சஞ்சயிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று (டிசம்பர் 19), தெலுங்கானா காங்கிரஸ் கட்சியின் சங்கரெட்டி சட்டசபை உறுப்பினரான டி.ஜெயபிரகாஷ் ரெட்டி செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார். அப்போது பேசிய அவர், “”மத பிரச்சினைகளைத் தூண்டி விட்டு, நாட்டு மக்களைத் துண்டாடுவதை நிறுத்துங்கள். கடந்த 2014 மக்களவை தேர்தலின் போது, ஒவ்வொருவரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் வழங்குவதாகவும், பெட்ரோல் விலையை ஒரு லிட்டர் 40 ரூபாய் தருவதாகவும் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் கவனம் செலுத்தத் தொடங்குங்கள்.” என்று விமர்சித்துள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பூசி – பாஜகவின் பீகார் தேர்தல் வாக்குறுதியும் உண்மை நிலவரமும்

“மக்களின் பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்க தொடங்கினாலே ஏன் நீங்கள் அதிலிருந்து விலகுகிறீர்கள்.” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்து ஆறு ஆண்டுகள் ஆகியும், 15 லட்சம் அளிப்பதற்கு, எந்த முயற்சியும் எடுத்தது போல தெரியவில்லை என்றும் ”பெட்ரோல் விலையை லிட்டருக்கு 40 ரூபாயாக குறைப்பதாக சொன்னார்கள். ஆனால் உலக சந்தையில் மிகக் குறைந்த அளவில் கச்சா எண்ணெய் விலை இருந்தபோதிலும், லிட்டர் 87 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.” என்று சுட்டிக்காட்டியுள்ளதாக தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியுள்ளது.

ஊழலற்றதா பாஜக அரசு? – மோசடியாக பரப்பப்படும் கருத்து

மேலும், ”சமையல் எரிவாயுவின் விலை இரட்டிப்பாகிவிட்டன. ஆனால் பாஜக தலைவர்கள் இதுபோன்ற அழுத்தமான மக்கள் பிரச்சினைகளை வசதியாக புறக்கணிக்கிறார்கள். பிரதமரிடம் பேசுங்கள். 15 லட்சம் ரூபாய்யை தெலுங்கானா மக்களின் ஒவ்வொரு வங்கி கணக்கிலும் டெபாசிட் செய்யப்படுவதை உறுதி செய்யுங்கள். இந்த பிரச்சினைகளை முதலில் தீர்த்து வையுங்கள்.” என்று தெலுங்கானா பாஜக தலைவர் பண்டி சஞ்சய்க்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 25 பைசா அல்லது 50 பைசா விலை கூடினாலே, பாஜக தலைவர்கள் இறங்கி சாலைகளை ஆக்கிரமிப்பார்கள் என்று அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

`குஜராத் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கிய பாஜக’ – வீடியோ ஆதாரம் வெளியிட்ட காங்கிரஸ்

“இப்போது அவர்கள் ஏன் சாலைகளில் வரவில்லை. சிலிண்டர் விலையை குறைப்பதற்காக தெருவில் இறங்கி போராடிய மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானியின் படம் மக்களின் மனதில் இன்னும் நினைவு இருக்கிறது.” என்று மேற்கோள்காட்டியுள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

மேலும், ”அரசியல் என்பது மதங்களையும் கோயில்களையும் பற்றியது மட்டுமல்ல, மக்களைப் பற்றியது தான். பண்டி சஞ்சயின் நிகழ்ச்சி நிரலில் ஏழை மக்கள் இருக்கிறார்களா இல்லையா என்பதை அறிய விரும்புகிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்