Aran Sei

இந்துக்கள் உட்பட எந்தவொரு மதம், மொழி பேசும் சமூகத்தையும் சிறுபான்மையினராக மாநில அரசே அறிவிக்கலாம்: உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தகவல்

ந்துக்கள் உட்பட எந்தவொரு மதம் அல்லது மொழி பேசும் சமூகத்தையும் குறிப்பிட்ட மாநிலத்திற்குள் சிறுபான்மையினராக மாநில அரசுகளே அறிவிக்கலாம் என்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

குடி உரிமை திருத்தச் சட்ட (CAA) அமலாக்கத்தை மீண்டும் தீவிரமாக்குகிறது மோடி அரசு – அ.மார்க்ஸ்

இந்தியாவில் உள்ள 10 மாநிலங்களில் இந்துக்கள் சிறுபான்மையினராக இருப்பதால், சிறுபான்மையினருக்கான திட்டங்களின் பலன்களை அவர்களால் பெற முடியவில்லை. ஆகவே மாநில அளவில் சிறுபான்மையினரை அடையாளம் காணுவதற்கான வழிகாட்டுதல்களை உருவாக்கக் கோரி வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் ஒன்றிய அரசு இவ்வாறு பதில் அளித்துள்ளது.

சிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களுக்கான தேசிய ஆணையச் சட்டம், 2004 இன் பிரிவு 2(எப்) இந்தியாவில் உள்ள சிறுபான்மை சமூகங்களை அடையாளம் காணவும் அறிவிக்கவும் ஒன்றிய அரசிற்கு அதிகாரம் அளிக்கிறது.

இந்தி மொழியில் மருத்துவக் கல்வி – மத்தியப் பிரதேசம் அறிவிப்பு

இந்து மதம், யூத மதத்தைப் பின்பற்றுபவர்கள் சிறுபான்மையினராக உள்ள குறிப்பிட்ட மாநிலங்களில் தங்களுக்கான கல்வி நிறுவனங்களை துவங்கி நிர்வகிப்பது தொடர்பான விஷயங்களை மாநில அளவில் பரிசீலிக்கலாம் என்று ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

“ஒரு மத அல்லது குறிப்பிட்ட மொழி பேசும் சமூகத்தைச் சிறுபான்மை சமூகமாக மாநில அரசுகளே அறிவிக்க முடியும். உதாரணமாக, மகாராஷ்டிரா அரசு யூதர்களைச் சிறுபான்மை சமூகமாக அறிவித்துள்ளது. கர்நாடக அரசு உருது, தெலுங்கு, தமிழ், மலையாளம், மராத்தி, துளு, லமணி, ஹிந்தி, கொங்கணி மற்றும் குஜராத்தி ஆகிய மொழி பேசுவோரைச் சிறுபான்மை மொழி சமூகமாக அறிவித்துள்ளது என்று சிறுபான்மை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இஸ்லாமிய வியாபாரிகளை தடை செய்துள்ள கர்நாடக அரசு அடுத்து விப்ரோவை தடை செய்யுமா? – காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கேள்வி

லடாக், மிசோரம், லட்சத்தீவு, காஷ்மீர், நாகாலாந்து, மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், பஞ்சாப், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் இந்து மதத்தையும் யூத மதத்தையிம்  பின்பற்றுபவர்கள் சிறுபான்மையாக இருக்கிறார்கள். பிற சிறுபான்மை இனத்தவர்களைப் போல இவர்களால் ( இந்து, யூதர்)தங்களுக்கான கல்வி நிறுவனங்களைத் துவங்கி நிர்வகிக்க முடியவில்லை என்று வழக்கறிஞர் அஷ்வினி குமார் உபாத்யாய் குற்றம் சாட்டியுள்ளார்.

“சிறுபான்மையினர் விவகாரத்தில் சட்டம் இயற்றும் அதிகாரம் மாநிலங்களுக்கு மட்டுமே உள்ளது என்று கூறினால், இது தொடர்பான சட்டம் இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கு மறுக்கப்படும், இது அரசியலமைப்பு திட்டத்திற்கு முரணானது” என்று ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தேர்தல் முடிந்ததால் கொரோனா தடுப்பு மருந்து சான்றிதழில் பிரதமர் மோடியின் புகைப்படம் – ஒன்றிய அரசு தகவல்

மேலும், “தேசிய சிறுபான்மையினர் ஆணையச் சட்டம், 1992 அரசியலமைப்பின் எந்த விதிகளையும் மீறவில்லை. இந்தச் சட்டத்தின் பிரிவு 2(எப்) ஒன்றிய அரசிற்கு ஒன்றும் கட்டுப்பாடற்ற அதிகாரத்தை வழங்கவில்லை” என்று ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சிறுபான்மையினருக்கான நலத் திட்டங்கள் ஒடுக்கப்பட்ட மற்றும் சிறுபான்மை சமூகத்தின் பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கு வழங்கப்படுவது. இது சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த அனைவருக்கும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய சிறுபான்மை விவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Source : NDTV

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்