மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்ட வேளாண்மை தொடர்பான மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்திலும் மத்திய மற்றும் மாநில அரசுகளை கண்டித்தும் இன்று, தி.மு.க சார்பில் அனைத்து கட்சி கூட்டம் கூட்டப்பட்டது.
அத்தியாவசிய பொருட்கள் சட்டத் திருத்தம், வேளாண் விளைபொருட்கள் வணிகம் மற்றும் வர்த்தக சட்டம், பண்ணை ஒப்பந்த சட்டம் ஆகிய மூன்று சட்டங்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டன.
'பாஜக அரசின் விவசாயிகள் விரோத சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தியும் – துணைபோகும் அதிமுக அரசை கண்டித்தும் 28-09-2020 அன்று காலை 10 மணிக்கு தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் – கழக தலைவர் @mkstalin அவர்கள் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் தீர்மானம்'#DMK #AntiFarmerBills pic.twitter.com/yPdt9WCGKy
— DMK IT WING (@DMKITwing) September 21, 2020
இந்தச் சட்டத்தைக் கொண்டு வந்த மத்திய அரசையும் அதை ஆதாரித்த அ.தி.மு.க தலைமையிலான மாநில அரசையும் கண்டித்து தி.மு.க சார்பில் அனைத்து கட்சிகள் கூட்டம் நடைபெற்றது.
சென்னை – அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்று வரும் 'பாஜக அரசின் விவசாயிகள் விரோத மசோதாக்கள்' தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. @KS_Alagiri பங்கேற்றார் pic.twitter.com/8fppZnOJaA
— Tamil Nadu Congress Committee (@INCTamilNadu) September 21, 2020
இந்த கூட்டத்தில், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், மனிதநேய மக்கள் கட்சி, திராவிடர் கழகம், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி ஆகிய கட்சிகள் கலந்து கொண்டன.
#வேளாண்மை_வர்த்தகம் தொடர்பான சட்டங்களைத் திரும்பபெற வலியுறுத்தியும், பாஜக- அதிமுக அரசுகள் மற்றும் அவற்றின் கூட்டணி கட்சிகளைக் கண்டித்தும் #செப்_28அன்று ஆர்ப்பாட்டம். திமுக கூட்டணிக் கட்சிகளின் கலந்தாய்வுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. #DMKAlliedPartiesProtest #DropFarmsLaws pic.twitter.com/hcDIz5Wkfu
— Thol. Thirumavalavan (@thirumaofficial) September 21, 2020
மூன்று வேளாண் சட்டங்களை திரும்பிப் பெற வேண்டும் என்று மத்திய அரசையும் அதற்கு துணைபோகும் அ.தி.மு.க அரசையும் கண்டித்து செப்டம்பர் 28-ம் தேதி (திங்கட்கிழமை காலை 10.00 மணி அளவில்) மாவட்டத் தலைநகரங்களிலும் – நகராட்சி மற்றும் ஒன்றியங்களிலும் “கொரோனா” பாதுகாப்பு விதிகளை கடைபிடித்து, திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான அனைத்துக் கட்சிகளின் சார்பில், “மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்” நடத்தபடும் என்று இந்தக் கூட்டத்தில் ஒருமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.
28-09-20 காலை 10 மணிக்கு மாவட்ட தலைநகரங்கள். நகரங்கள் மற்றும் ஒன்றிய தலைநகரங்களில் மத்திய அரசு நிறைவேற்றியுள்ள, அதிமுக ஆதரித்துள்ள விவசாயிகளின் வாழ்வுரிமையை பறிக்கும். கருப்பு சட்டங்களைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தத் திமுக தலைமையிலான தோழமை கட்சிகள் கூட்டத்தில் முடிவு. pic.twitter.com/BA6uJazElE
— Jawahirullah MH (@jawahirullah_MH) September 21, 2020
இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைத்து விவசாய அமைப்புகளும் தொழிலாளர் அமைப்புகளும் வணிக சங்கங்களும், விவசாயிகள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் பங்கேற்க கூட்டம் அழைப்பு விட்டிருக்கிறது.
தமிழக உழவர்களுக்கு நன்மை பயக்கும் வேளாண் விளைபொருட்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் சட்டங்களை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அரசியலாக்குகிறார்!
– மாண்புமிகு தமிழகமுதல்வர் @CMOTamilNadu அவர்கள் விளக்கமான அறிக்கை!#TNGovt #AgricultureBills pic.twitter.com/UXk5QmX5j2
— AIADMK IT WING (@AIADMKITWINGOFL) September 19, 2020
மத்திய அரசு நிறைவேறியிருக்கும் சட்டங்கள் விலை வீழ்ச்சிகள் போன்ற பாதிப்புகளிலிருந்து விவசாயிகளை பாதுகாக்கும் என்றும் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்களுக்கு நன்மைகள் உண்டாக்கும் என்றும் தமிழக முதல்வர் சென்ற சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.