Aran Sei

ஸ்டான் சாமி மரணம் அரச கட்டமைப்பு செய்த கொலை –எல்கர் பரிஷர் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றச்சாட்டு

ழங்குடியின உரிமைகள் போராளி ஸ்டான் சாமியின் மரணம், ‘ஒரு மென்மையான ஆத்மாவை அரசு கட்டமைப்பு செய்த கொலை’ என எல்கர் பரிஷத் வழக்கில் கைது செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் குற்றச்சாட்டு.

எல்கர் பரிஷத் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 8 ஆம் தேதி கைது செய்யப்பட்ட ஸ்டான் சுவாமி, மகாராஷ்டிரா மாநிலம் தலோஜா சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். தனியார் மருத்துவமனையின் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (ஜூலை 5) மதியம் 1.30 மணியளவில் உயிரிழந்தார்.

இது தொடர்பாக மினால் காட்லிங், ராய் வில்சன், மோனாலி ராவுத், கோயல் சென், ஹர்ஷலி போடார், சரத் கெய்க்வாட், மாய்ஷா சிங், ஒய் ஃபெரேரா, சூசன் ஆபிரகாம், பி ஹெம்லதா, சஹ்பா ஹுசைன், ராமா டெல்தும்ப்டே, ஜென்னி ரோவேனா, சுரேகா கோர்கே, பிரனாலி பராப், ரூபாலி ஜாதவ், ஃப்ர் ஜோ சேவியர் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில், “பீமா கோரகான் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களின் நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களான நாங்கள் அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் இழப்பால் ஆழ்ந்த வேதனையும் அதிர்ச்சியும் அடைந்துள்ளோம். இது இயற்கையான மரணம் அல்ல, மனிதாபிமானமற்ற அரசால் செய்யப்பட்ட ஒரு மென்மையான ஆன்மாவின் கொலை. ஜார்கண்ட பழங்குடியின மக்களுக்காக தனது வாழ்க்கையை கழித்த ஸ்டான் சுவாமி, பழிவாங்கும் அரசால் பொய்யாக சிறையில் அடைக்கப்பட்டு, அவரின் அன்புக்குரியவர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு இந்த முறையில் இறக்கத் தகுதியற்றவர்” என குறிப்பிட்டனர்.

”அவரது மென்மை, அவரது மனிதாபிமானம் மற்றும் இரக்கத்தன்மையை நினைவு கூர்ந்தாலும், அவரை காவலில் வைத்த அநீதியை மறக்க முடியாது. அவரது வயது மற்றும் உடல்நிலமின்மை கொண்ட ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டார் என்பதே மனச்சாட்சியற்றது. அவருக்கு எதிரான விசாரணை ஏற்கனவே முடிந்துவிட்ட நிலையில், அவரை இந்த பெருந்தொற்று காலத்தில் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டது ஏற்க முடியாதது.”என அவர் குற்றம்சாட்டினர்.

”ஸ்டான் சுவாமியைக் கைது செய்யும்போது அவர் வெளியிட்டிருந்த காணொளியில், கைது காரணமாக தேசிய புலனாய்வு முகமை கூறும் ஆவணங்களுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை, இதற்கு முன்பு அதை பார்த்ததில்லை. அதை கணினியின் அவர் சேமித்து வைக்கவில்லை என தெரிவித்திருந்தார். இந்த ஆவணங்களை அவருக்கே தெரியாமல் அவரது கணினியில் வைக்கப்பட்ட என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதை இந்த ஆண்டின் இறுதியில் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழ் உறுதி செய்தது.” என அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.

”அருட்தந்தை ஸ்டான் சுவாமியின் உடல்நிலை குறித்த அலட்சியம் சிறையிலும் தொடர்ந்தது. பார்கின்ஸன் நோயால் பாதிக்கப்பட்டவருக்கு தண்ணீர் உறிஞ்சி குடிக்கும் குழாய் கூட சிறை நிர்வாகத்தால் மறுக்கப்பட்டு, அதை அவர் நீதிமன்றம்வரை சென்று போராடி பெற வேண்டியிருந்தது. அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டது கூட சிறையில் கண்டறியப்படவில்லை. நீதிமன்ற உத்தரவிற்கு பிறகே அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்” என அவர்கள் குற்றம்சாட்டினர்.

”ஸ்டான் சுவாமியின் ஜாமீன் மனுவும் இரக்கமற்ற முறையில், தேசிய புலனாய்வு முகமையால் நிராகரிக்கப்பட்டது. விசாரணையின்போது அவர், நீண்ட நாட்கள் பழகிய மக்களுடன் வாழ விரும்புவதாகவும், இறக்க விரும்புவதாகவும் கூறியதையும் நீதிமன்ற ஏற்க மறுத்துவிட்டது.” என்பதை அவர்கள் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளனர்.

”அவரின் மரணத்திற்கு துக்கப்படும் அதே வேளையில், அவரது துரதிருஷ்டவசமான மரணத்திற்கு அலட்சியமான சிறை நிர்வாகம், அலட்சியமான நீதிமன்றம் மற்றும் தீங்கிழைக்கும் நீதிமன்றம் தான் காரணம் என்பதில் சந்தேகத்திற்கு இடமின்றி வைத்திருக்கிறோம். மேலும் அதே சிறைகளில் இது போன்ற அநீதிகளை எதிர்கொண்டுள்ள எங்கள் குடும்ப உறுப்பினர்கள்குறித்து அச்சமடைகிறோம். அவர்கள் பாதுகாப்பிற்காக எங்கள் விழிப்புணர்வை தொடர்வோம், நாங்கள் பார்வையாளர்களாக இருப்ப விரும்பவில்லை, விலை கொடுக்கத் தயாராக உள்ளோம்.” என அவர்கள் அந்த அறிக்கையில் தெரிவித்தனர்.

 

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்