Aran Sei

தொடரும் போதைப் பொருள் பயன்பாட்டு விசாரணை : கரண் ஜோஹருக்கு நோட்டீஸ்

credits : dna india

வைரல் ஆன பார்ட்டி வீடியோவின் அடிப்படையில் பாலிவுட்டின் திரைப்பட தயாரிப்பாளர் கரண் ஜோஹருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கடந்த ஆண்டு கரண் ஜோஹர் இல்லத்தில் நடந்த நிகழ்ச்சியில் போதைப்பொருட்களை பயன்படுத்துவது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது. அந்த நிகழ்ச்சியில் சுஷாந்த் சிங் ராஜ்புட் உட்பல பாலிவுட்டின் பல முன்னணி நட்சத்திரங்கள் கலந்து கொண்டுள்ளனர். அந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட சுஷாந்த் சிங் ராஜ்புட் போதையான நிலையில் காணப்பட்டுள்ளார்.

சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் மஞ்சிந்தர் சிங் சிர்சா வீடியோவை போதை பொருள் தடுப்பு பிரிவுக்கு அனுப்ப்பியுள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தான் கரண் ஜோஹருக்கு நோட்டீஸ் அனுப்பபட்டுள்ளது. வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து விசாரிக்கவே கரண் ஜோஹருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

அந்த வீடியோ வைரலாகிய பின்னர், அது குறித்து கரண் ஜோஹர் ஒரு பொது அறிக்கையை வெளியிட்டார், அதில் தன்னுடைய வீட்டில் நடந்த நிகழ்ச்சியில் போதைப்பொருள் பயன்படுத்தியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்துள்ளார்.

கடந்த ஜூன் மாதம் 14-ம் தேதி சுஷாந்த் சிங் ராஜ்புட் மும்பையில் உள்ள அவரது வீட்டிலிருந்து உயிரற்ற உடலாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனை அறிக்கையில் கழுத்தில் தூக்குக்கயிறு இறுக்கியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு இறந்திருக்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணம் சமூக வலைதளங்களிலும் தேசிய ஊடகங்களிலும் முக்கிய பேசு பொருளாக மாற்றப்பட்டது. தற்கொலையில் மர்மம் இருப்பதாக குற்றம் சாட்டி சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் நண்பர் ரியா சக்ரவர்த்திக்கு எதிராக பிரச்சாரம் நடத்தப்பட்டது.

பாலிவுட்டில் [இந்தித் திரைப்படத் துறை] இருக்கும் குடும்ப அரசியல், திரையுலக நட்சத்திரங்களிடையே இருக்கும் பரவலான போதைப் பொருள் பயன்பாடு என பல்வேறு விஷயங்கள் பொது தளத்தில் விவாதிக்கப்பட்டன.

‘திரைத்துறையை கொச்சைப்படுத்தாதீர்’ – ஜெயா பச்சன் கண்டனம்

பீகாரில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், அரசியல் ஆதாயத்துக்காக இந்தப் பிரச்சாரத்தை பாஜக முன்னெடுப்பதாக பின்னர் ஆய்வுகளில் தெரிய வந்தது.

சுஷாந்த் சிங் ராஜ்புட் – மரணத்தில் அரசியல் செய்த பாஜக : ஆய்வு முடிவு

சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக, நடிகர் சல்மான் கான், கரண் ஜோஹர், சஞ்சய் லீலா பண்சாலி, ஏக்தா கபூர் உள்ளிட்ட 8 பேர் மீது பீகார் மாநிலம் முஷாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தற்கொலைக்கு உடந்தை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், போதை தடுப்புப் பிரிவினரால் மும்பையில் கைது செய்யப்பட்ட ரியா சக்ரவர்த்தி பல நாட்களுக்குப் பிறகு பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரது குடும்பத்தினரும் துன்புறுத்தப்பட்டனர்.

கடந்த அக்டோபர் 3-ம் தேதி இவையெல்லாம் ஒரு முடிவுக்கு வந்தன. அகில இந்திய மருத்துவ அறிவியல் கழகம் (எய்ம்ஸ்) சுஷாந்த் தற்கொலை செய்துகொண்டார் என்பதை உறுதி செய்தது.

இந்நிலையில் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரணத்தில் பேசுபொருளாக இருந்த போதைப் பொருட்கள் பயன்பாடு குறித்து பாலிவுட்டின் முன்னணி திரைப்பட தயாரிப்பாளரான கரண் ஜோஹருக்கு போதைப்பொருள் தடுப்பு பிரிவு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

 

நடிகை ரியா மீது ரிபப்ளிக் டிவி திட்டமிட்ட அவதூறு – பத்திரிக்கையாளர் புகார்

நடிகர் கங்கனா ராணாவத் சமூக ஊடகங்களில் கரன் ஜோஹருக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தை மேற்கொண்டார். திரைப்படத் (பாலிவுட்) துறையில் யார் இருக்க வேண்டும், யார் இருக்க கூடாது என்பதை தீர்மானிக்கும் திரைத்துறை மாஃபியாவின் தலைவர் என்று அவரை குறிப்பிட்டுள்ளார். கங்கானா ராணாவத்தை திரைப்படத் தொழிலை விட்டு வெளியேறும் படி கரண் கூறியதாக கங்கனா குற்றம் சாட்டியுள்ளார் என இந்துஸ்தான் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்