மத்திய அரசு கொண்டு வந்த மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற சிறப்புச் சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவதற்கு மேற்கு வங்க அரசு முடிவெடுத்துள்ளது.
இதுகுறித்து, நேற்று (ஜனவரி 4) திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி பேசிய போது, “மூன்று புதிய விவசாய சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்ற விரைவில் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்டுவோம்.” என்று அறிவித்துள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.
விவசாயிகளுடன் பேசிய மம்தா பானர்ஜி – போராட்டத்துக்கு திரிணாமூல் ஆதரவு
“நான் விவசாயிகளுக்கு ஆதரவாக இருக்கிறேன். அதனால், நாட்டின் நலனுக்காகவும் விவசாயிகளின் நலனுக்காகவும் இந்த மூன்று மசோதாக்களையும் திரும்ப பெறப்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.” என்று கூறியுள்ளார்.
பிரதமர்-கிசான் திட்டத்தைச் செயல்படுத்த தனது அரசு தயாராக இருக்கிறது என்றும் இந்தத் திட்டத்தில் இணைவதற்காக மத்திய அரசின் வலைதளத்தில் பதிவு செய்தவர்களின் விவரங்களை தருமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம் என்றும் மம்தா கூறியுள்ளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.
மேலும்,“பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் ஒதுக்கப்பட்ட நிதியை மாநில அரசுகளுக்கு அனுப்புமாறு நான் பலமுறை மத்திய அரசிடம் கேட்டு விட்டேன். ஆனால், மத்திய அரசு இந்தத் திட்டத்திற்கான தரவுகளை சரிபார்க்க முயன்று வருகின்றனர். இந்த விஷயத்தை அரசியலாக்கவே மத்திய அரசு முயற்சிக்கிறது என்பதை நான் புரிந்துகொண்டேன். இதன் காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படக்கூடாது என்று நாங்கள் நினைத்தோம்.” என்று மம்தா பானர்ஜி மத்திய அரசின் செயற்பாடுகளை விளக்கியுள்ளார்.
முன்னதாக, வேற்கு வங்க காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள், விவசாய சட்டங்கள் தொடர்பாக சட்டசபை சிறப்புக் கூட்ட கோரியிருந்தன. மூன்று விவசாய சட்டங்களுக்கு எதிராக இதுவரை ஐந்து மாநில சட்டசபைகளில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளன.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.