Aran Sei

விவசாயிகள் போராட்டம் தொடர்பாக இந்தியாவிடம் பேசுங்கள் – கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

விவசாயிகள் போராட்டம், தொடர்பாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம்  பேசுமாறு, கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மார்க் கர்னாயோவிற்கு, கனடா நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் கடிதம் எழுதியுள்ளதாக, தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது.

பிப்ரவரி 8 ஆம் தேதி, கர்னாயோவின் அலுவலகத்திற்கு அனுப்பட்டுள்ள அந்தக் கடிதத்தில், போராட்டக்களத்தில் மின்சாரம், குடிநீர், இணைய சேவை முடக்கப்பட்டது மற்றும் போராட்டக்காரர்கள் மீது தடியடி, கண்ணீர்புகை, நீர் பிரங்கி ஆகியவை பயன்படுத்தியது குறித்து பேசுமாறு கோரியிருந்ததாக, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1 ஆம் தேதி, கைது செய்யப்பட்டிருக்கும் பத்திரிக்கையாளர் மந்தீப் புனியா, தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ள தர்மேந்தர் சிங் குறித்தும், போராட்டக்களத்திற்கு அருகில் தடுப்புகளை அமைத்து, ஊடகங்களுக்கு அனுமதி மறுத்திருப்பது தொடர்பாகவும், பேசுமாறு அந்தக் கடிதத்தில் கோரப்பட்டிருப்பதாக, தி வயர் தெரிவித்துள்ளது.

தேசிய பங்குச் சந்தை – தரகர்களுக்கு ஆதாயம் அளித்த முன்னாள் தலைவர்கள் சித்ரா ராமகிருஷ்ணன், ரவி நரேன்

நாடாளுமன்ற உறுப்பினர்கள் டிம் எஸ் உப்பல், தோட் டோஹர்டி, கார்னெட் ஜெனுயிஸ், ஜஸ்ராஜ் சிங் ஹாலன், பிராட் விஸ் ஆகியோர் அந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டு இருப்பதாக அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் கடிதத்தில் ”நாடாளுமன்ற உறுப்பினராகிய நாங்கள், எங்கள் தொகுதி மக்கள் மற்றும் பல கனடியர்கள் சார்பாக இந்தியாவில் நடைபெற்று வரும் அமைதியான போராட்டம் மற்றும் இந்திய ஜனநாயகத்தை ஆதரிக்கும் அக்கறை கொண்டிருப்பதால், இந்தியாவின் வெளியுறவுத்துறை மற்றும் ஒத்த கருத்துடைய சர்வதேச சகாக்களுடன் பேசுமாறு உங்களைக் கேட்டுக்கொள்கிறோம்.” எனக் கூறியிருப்பதாக அதில் தி வயர் தெரிவித்துள்ளது.

ஊபா – மிசா, தடா, பொடாவுக்கு நிகரானது, மக்களாட்சிக்கு எதிரானது – வைகோ

”2020, நவம்பர் 30 ஆம் தேதி, இந்தியாவில் அமைதியான போராட்டத்திற்கான உரிமைகுறித்து தனது கவலையைக் கனடா அரசாங்கம் தெரிவித்திருந்த நிலையில், போராட்டக்காரர்கள்மீது தடியடி, கண்ணீர் புகை, நீர் பிரங்கி ஆகியவற்றை காவல்துறையினர் பயன்படுத்தி இருக்கின்றனர்” என அந்தக் கடிதத்தில் கூறியிருப்பதாக, அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“பிரதமர் உங்களுக்கு உத்தரவிட்டு இருப்பதன்படி, உங்களின் பொறுப்பு என்பது, உலகில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான கனடாவின் ஆர்வங்களை முன்னெடுப்பதும், உலகின் அடிப்படை பிரச்னைகளை எதிர்கொள்வதும் தான். இது ஜனநாயகத்திற்கு விடப்பட்டுள்ள உலகளாவிய சவால் மற்றும் இந்திய குடிமக்கள் அமைதியான முறையில் போராடுவதற்கான உரிமை குறித்தது” எனவும் கடித்ததில் குறிப்பிடப்பட்டுள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

’இளைஞர்களின் எதிர்காலத்தை பாஜகவின் காலடியில் வைத்து தன் ஆட்சியை காப்பாற்றுகிறார் எடப்பாடி’ – கனிமொழி

”ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளை ஆதரிக்க ராஜதந்திர பங்கைக் காட்டவும், சர்வதேச அளவில் தலைமைத்துவத்தை வெளிப்படுத்தவும், இது கனடாவிற்கு ஒரு வாய்ப்பு” என அந்தக் கடிதத்தின் இறுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தி வயர் கூறுகின்றது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்