Aran Sei

’விவசாயிகளின் தற்கொலைக்கு மோடி அரசு ஒரு ஆறுதல் வார்த்தைக்கூட சொல்லவில்லை’ – சோனியா காந்தி

னநாயகத்தின் உண்மையான அர்த்தம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களைக் காப்பதாகும் என்றும் 3 விவசாய சட்டங்களையும் உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து, நேற்று (ஜனவரி 3) அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “கடந்த 39 நாட்களாக டெல்லியின் எல்லைகளில் நமது விவசாயிகள் கடும் குளிரிலும், மழையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களின் அவலநிலை என்னையும் அனைத்து மக்களையும் கவலை கொள்ளச் செய்துள்ளது.” என்று தெரிவித்துள்ளார்.

டெல்லி போராட்டத்தில் பலியாகும் விவசாயிகள் : ’உணர்ச்சியற்று’ இருக்கும் அரசாங்கம்

போராட்டம் தொடர்பான மத்திய அரசின் கடுமையான அணுகுமுறையால், இதுவரை 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர் என்றும் சில விவசாயிகள் தற்கொலை நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“ஆனால், விவசாயிகளின் தற்கொலை முடிவைப் பார்த்து மோடி அரசாங்கத்துக்கும் எந்த அமைச்சருக்கும் ஆறுதல் வார்த்தை கூறக் கூடத் தோன்றவில்லை. இறந்த போன அனைத்து விவசாய சகோதரர்களுக்கு என்னுடைய இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர்களை இழந்து வாடும் குடும்பங்களுக்கு மனவலிமை அளிக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்கிறேன்.” என்று அவர் கூறியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபில் தொடரும் போராட்டம் – 12 விவசாயிகள் பலி

மத்திய அரசின் நிலைப்பாடு ஆணவத்துக்கு சமமானது என்று குறிப்பிடும் அவர், “ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் என்பது, விவசாயிகளின், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பதாகும் என்பதை கண்டிப்பாக உணர வேண்டும். தேசத்துக்கே உணவு அளிக்கும் விவசாயிகளையும், மக்களையும் கண்டுகொள்ளாத சுதந்திரத்துக்கு பின் வந்த முதல் அகங்கார அரசாகப் மத்திய அரசைப் பார்க்கிறேன்.” என்று சோனியா காந்தி விமர்சித்துள்ளார்.

“விவசாயிகளைச் சோர்வடையச் செய்து, அவர்களை அப்புறப்படுத்தி விட வேண்டும் என்ற உங்கள் கொள்கை தெரிகிறது” என்றும் “ஆனால், விவசாயிகள் உங்கள் முன்பு பணியமாட்டார்கள்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

‘இடது சாரிகளின் வலிமையே மக்கள் போராட்டங்கள்தான்’ – சீதாராம் யெச்சூரியோடு நேர்காணல்

மேலும், “மத்திய அரசு அகம்பாவத்தை விட்டு, வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற்று, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஜனநாயகத்தின் உண்மையான அர்த்தம் என்பது விவசாயிகள், தொழிலாளர்கள் நலன்களைக் காப்பதாகும்.” என்று சோனியா காந்தி வலியுறுத்தியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்