Aran Sei

’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

த்திய அரசின் அதிகாரப்போக்கு நீடித்தால், சோவியத் யூனியனைப்போல் இந்திய நாடு சிதறுண்டு போகும் என்று சிவசேனா கட்சி விமர்சித்துள்ளது.

இன்று (டிசம்பர் 27), சிவசேனா கட்சியின் அதிகாரபூர்வ நாளேடான ‘சாம்னா‘வில் தலையங்கத்தில் எழுதப்பட்டுள்ளது. அதில், ”அரசியல் ஆதாயங்களுக்காக மக்களைத் துன்புறுத்துகிறோம் என்று மத்திய அரசு உணராமல் போனால், சோவியத் போல், மாநிலங்கள் சிதறுண்டு போவதற்கு நீண்டகாலம் ஆகாது. 2020-ஆம் ஆண்டு என்பது மத்திய அரசின் செயல்திறன், நம்பகத்தன்மை மீது கேள்வி எழுப்பும் ஆண்டாக உள்ளது.” என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சீக்கியர்களை நேசிக்கும் மோடி – அவர்களைப் போராட வைத்தது ஏன்? – சிவசேனா கேள்வி

சமீபத்தில் பாஜக பொதுச்செயலாளர் கைலாஷ் விஜய் வர்க்கியா ஒரு பேட்டி அளித்ததாகவும் அதில், மத்தியப் பிரதேசத்தில் கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியைக் கவிழ்க்க பிரதமர் மோடி சிறப்பு கவனம் செலுத்தினார் என்று விஜய் வர்க்கியா தெரிவித்ததாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

”மக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசைக் கவிழ்க்க சிறப்பு கவனத்தை பிரதமர் எடுத்துக் கொண்டாரா? நாட்டுக்கு உரித்தானவர் பிரதமர். கூட்டாட்சி அடிப்படையில்தான் இந்த தேசமே இருக்கிறது. மாநிலத்தில் பாஜக ஆட்சி இல்லாத அரசுகளும் நாட்டின் நலன்பற்றிதான் சிந்தித்து வருகின்றன. ஆனால், பிரதமரின் இதுப்போன்ற செயல்களால் இந்த உணர்வு அழிக்கப்பட்டு வருகிறது.” என்று சாம்னா தலையங்கம் குறிப்பிட்டுள்ளது.

`வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா

மேற்கு வங்க முதல்வரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான மம்தா பானர்ஜியை ஆட்சி அதிகாரத்திலிருந்து இறக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது என்றும் “ஜனநாயக நடைமுறையில் அரசியலில் ஏற்படும் தோல்விகள் என்பது சாதாரணமானது. ஆனால், மத்திய அரசு அந்தத் தோல்வியைத் தாங்க முடியாமல் மம்தா அரசை கலைக்க முயல்வது வேதனை அளிக்கும்படியாக உள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“நடிகை கங்கணா ரணாவத்தையும், ஊடகவியலாளர் அர்னாப் கோஸ்வாமியையும் பாதுகாப்பதற்கு மத்திய அரசு முயற்சிக்கிறது. இந்திய எல்லையில் சீன நாட்டு ராணுவம் ஆக்கிரமிப்பு செய்த போதும், அவர்களை  புறமுதுகிட்டு அனுப்ப எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. மாறாக, இந்த விவகாரத்தை திசை திருப்ப தேசபற்று முன்வைக்கப்பட்டு, சீனப் பொருட்களை வாங்க வேண்டாம் என்றுக் கூறி சீன நாட்டு முதலீடு ஊக்குவிக்கப்பட்டது.” என்று விமர்சித்துள்ளது.

ஆளுநருக்கு மூளை இருந்தால் புரிந்து கொள்வார் : உத்தவ் தாக்கரே

உலகமே கொரோனாவில் பாதிப்படைந்த போது, அமெரிக்க அரசு பொருளாதாரப் பிரச்சினையில் சிக்கிய தன் நாட்டு மக்ககளுக்கு உரிய நிதியுதவியை வழங்கியது என்றும் இதனால் மாதந்தோறும் ரூ.65 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள அமெரிக்க டாலர் மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும் என்றும் அமெரிக்க அரசின் கொரோனா கால நடவடிக்கையை மேற்கோள்காட்டியுள்ளது.

“இதேபோல, பிரேசில் உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. ஆனால், இந்தியாவில் மக்கள் அனைவரும் கொரோனா தொற்றுப் பாதிப்பு ஏற்பட்டு ஓராண்டாகியும் வெறும் கைகளுடன்தான் இருக்கிறார்கள்.” என்று குற்றஞ்சாட்டியுள்ளது.

டிஆர்பி வழக்கில் ரிபப்ளிக் டிவியைக் காப்பாற்ற முயல்கிறதா யோகி ஆதித்யநாத் அரசாங்கம்?

ரூபாய் 1000 கோடி செலவு செய்து கட்டப்படும் புதிய நாடாளுன்றம் எந்தச் சூழலையும் மாற்றிவிடாது என்றும் அந்தப் பணத்தை மக்களின் சுகாதாரத்தில் முதலீடு செய்ய பிரதமர் மோடியிடம் மக்கள் வலியறுத்த வேண்டும் என்றும் சாம்னாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்