Aran Sei

சீக்கியர்களை நேசிக்கும் மோடி – அவர்களைப் போராட வைத்தது ஏன்? – சிவசேனா கேள்வி

டந்த 19 ஆம் தேதி, டெல்லி குருத்வாரா ராகப்கஞ்சில் உள்ள குரு தேக் பகதூரின் நினைவிடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சீக்கிய குரு தேக் பகதூர், முகலாய பேரரசர் அவுரங்கசீபின் உத்தரவின் பேரில் கொல்லப்பட்ட பிறகு அவரது உடல் எரியூட்டப்பட்ட இடத்தில் குருத்வாரா கட்டப்பட்டுள்ளது.

நேற்று முன் தினம் (டிசம்பர் 20) பிரதமர் நரேந்திர மோடி, குருத்வாரா ராகப்கஞ்சிற்கு சென்று,  குரு தேக் பகதூருக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து, சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சமனாவில் ஒரு தலையங்கம் வெளியாகியுள்ளது.

குருத்வாராவில் வழிபட்ட மோடி – ” விவசாயிகளை சந்திக்க மறுப்பது ஏன்? ” : காங்கிரஸ்

அதில், “பிரதமர் மோடி அவரகள் குரு தேக் பகதூரிடமிருந்து ஊக்கம் பெற்றுள்ளார். அதற்கு மகிழ்ச்சி. டெல்லி எல்லைக்கு அருகே ஆயிரக்கணக்கான சீக்கிய போராளிகளும் இதே ஊக்கத்துடனேயே போராடிக்கொண்டிருக்கிறார்கள். எனவே இங்கே ஒரு கேள்வி எழுகிறது. இந்த போரின் முடிவு என்னவாக இருக்கும்?” என்று தலையங்கம் கேள்வி எழுப்பியுள்ளது.

பிரதமர் மோடி குருத்வாராவை அடைந்தபோது குர்பானி வாசிக்கப்பட்டுள்ளது என்றும் ஒருவர் தனது எண்ணங்களை மாற்றாமல், கடவுளுக்கு சேவை செய்வதும், பக்தி செலுத்துவதும், புனித மத புத்தகங்களின் அர்த்தத்தை புரிந்துக்கொள்ளாமல், அதை பலமுறை வாசிப்பதும் எந்த பயனையும் அளிக்காது என்று குர்பானியில் கூறப்பட்டுள்ளது என்றும் அதில் மேற்கோள்கட்டப்பட்டுள்ளது.

 

பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக போலி செய்தி – ஏஎன்ஐ நிறுவனம் மீது குற்றச்சாட்டு

மேலும், “ஒருவரின் இறுதி காலம் வரும். அப்போது, அவர் செய்த எல்லா வினைகளும் கணக்கில் கொள்ளப்படும். அதில் இருந்து யாரும் தங்களை காப்பாற்றிக்கொள்ள முடியாது என்று குர்பானியில் உள்ளது.” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

“பிரதமர் மோடியின் எதிர்பாளர்கள், அவரின் குருத்வாரா வருகைக்குப் பின்னால் அரசியல் இருக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் பிரதமர், சீக்கியர்களை இவ்வளவு  நேசிக்கிறார் என்றால், பஞ்சாபிலிருந்து வந்துள்ள விவசாயிகள் ஏன் குளிரில் போராடிக்கொண்டிருக்கிறார்கள் என்று கேட்கிறார்கள்.” என்று தலையங்கத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. .

 

வாரணாசி : நரேந்திரமோடி வருகைக்காக அகற்றப்பட்ட சேரிக் குடியிருப்புகள்

“ஆனால் யாரும் மோடியின் நம்பிக்கையை கேள்வி கேட்கக்கூடாது. குரு தேக் பகதூர் ஒரு சிறந்த துறவி. அவர் மனிதநேயம், கொள்கைகள் மற்றும் இலட்சியங்களுக்காக பல தியாகங்களை செய்துள்ளார். மதத்தின் பாதுகாவலராக இருந்துள்ளார். ஆகவே, சீக்கியர்கள் மட்டுமல்ல, இந்த நிலத்தில் உள்ள அனைவரும் குரு தேக் பகதூர் முன் தலைவணங்க வேண்டும்.” என்று சிவசேனா கட்சியின் அதிகாரப்பூர்வ இதழான சமனாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்