Aran Sei

மஹாராஷ்ட்ரா : அமலாக்கத்துறை அலுவலகத்தில் “பாஜக மாநில அலுவலகம்” என்று பதாகை வைப்பு

மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தின் வெளியே “பாரதிய ஜனதா மாநில அலுவலகம்” எனும் பதாகையை மகாராஷ்ட்ராவை ஆளும் சிவசேனா கட்சி அமைத்துள்ளது என டைம்ஸ் நவ் செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று (27-12-2020) சிவசேனாவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினரும் கட்சியின் தலைமை செய்தி தொடர்பாளருமான சஞ்சய் ராவத்தின் மனைவி (வர்ஷா ராவத்), பஞ்சாப் மற்றும் மகாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கி பண மோசடி விவகாரத்தில், விசாரணைக்கு ஆஜராகுமாறு (29-12-2020) அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்த எதிர்க்கட்சிகள், பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் மத்திய அமைப்புகளான மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ), வருமானவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றை கொண்டு பாஜக அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையில் ஈடுபடுகிறது என குற்றஞ்சாட்டியுள்ளார்.

’மத்திய அரசின் அதிகாரப்போக்கால், சோவியத் போல் இந்தியா சிதறும்’ – சிவசேனா எச்சரிக்கை

 

”மகா விகாஸ் கூட்டணி (தேசியவாத காங்கிரஸ், சிவசேனா, காங்கிரஸ்) இணைந்து தேர்தலைச் சந்தித்தால் பாஜகவுக்கு எதிர்காலம் இல்லை என்பதை பாஜக புரிந்துக் கொண்டது. மகா விகாஸ் கூட்டணி அரசை பாஜக மத்திய அமைப்புகளை பயன்படுத்தி சீர்குலைக்க முயலும் என்று நாங்கள் முன் கூட்டியே அறிந்திருந்தோம், அது தற்போது உண்மையாகிவிட்டது” என காங்கிரஸ் தலைவர் சச்சின் சவாந்த் கூறியுள்ளதாக இந்தியா டுடே செய்தி வெளியிட்டுள்ளது.

பீகாரில் சரிந்த காங்கிரஸ் – கேள்விக்குள்ளாகும் ராகுல் காந்தியின் தலைமை

வர்ஷா ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த சஞ்சய் ராவத், ”இது ஒரு கோழைத்தனமான நடவ்டிக்கை. அவர்கள் (பாஜக) மிகவும் தரம் தாழ்ந்து மனைவியை, குழந்தைகள், குடும்பத்தை குறி வைத்தால் அதற்கேற்ற பதிலடியை சேனா கொடுக்கும்” என எச்சரித்துள்ளார்.

சீக்கியர்களை நேசிக்கும் மோடி – அவர்களைப் போராட வைத்தது ஏன்? – சிவசேனா கேள்வி

”கடந்த மூன்று மாதங்களாக பல பாஜக தலைவர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்று வருவதை நாங்கள் கண்காணித்து கொண்டு தான் இருக்கிறோம். யாராலும் இந்த அரசை சீர்குலைக்க முடியாது. நாங்கள் அமலாக்கத்துறைக்கு பதிலடி கொடுப்போம்” என்று சஞ்சய் ராவத் கூறியுள்ளார்.

கடந்த ஒரு ஆண்டில் சரத் பவார், ஏக்நாத் காத்சே, பிரதாப் சர்நாயக் ஆகியோருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க திட்டமிட்டே இது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடுபடுகிறார்கள் என சஞ்சய் ராவத் செய்தியாள்ர் சந்திப்பில் குற்றஞ்சாட்டியுள்ளார்.

`வீர சாவர்க்கருக்குப் பாரத ரத்னா வழங்காதது ஏன்?’ – சிவசேனா

”இது அரசியல் உள்நோக்கம் உள்ள நடவடிக்கை. மகா விகாஸ் கூட்டணி அரசு நிலையாக இருக்கிறது. எங்களுக்கு பயம் இல்லை” என யுவ சேனாவின் தலைவரும் மகாராஷ்ட்ரா முதலமைச்சரின் மகனுமான ஆதித்யா தாக்கரே தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் நேற்றைய தினம் மகாராஷ்ட்ராவில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு முன்பு “பாரதிய ஜனதா கட்சி மாநில அலுவலகம்” எனும் பதாகை சிவசேனாவால் வைக்கப்பட்டுள்ளது.

‘ஜனநாயகத்தின் முடிவுகாலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது’ – ‘சாம்னா’ ஏட்டின் தலையங்கம்

மத்திய அரசின் அதிகாரப்போக்கு நீடித்தால், சோவியத் யூனியனைப்போல் இந்திய நாடு சிதறுண்டு போகும் என்று சிவசேனா கட்சி தன் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில் விமர்சித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்