Aran Sei

`பசுக்களுக்குத் தனி அமைச்சகம் அமைக்கப்படும்’ – மத்தியப் பிரதேசம்

த்தியப் பிரதேச மாநிலத்தில் பசுக்களின் பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்காக ‘பசு அமைச்சரவை’ அமைக்க மாநில அரசு முடிவு செய்துள்ளதாக முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

“மாநிலத்தில் உள்ள பசுக்களைப் பாதுகாக்கவும் வளர்க்கவும் ’பசுஅமைச்சரவை’ அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.” என்று அதில் தெரிவித்துள்ளார்.

கால்நடை வளர்ப்பு, வனம், பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சி, வருவாய், விவசாயிகள் நலத்துறை போன்றவை இந்த அமைச்சகத்தில் சேர்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

தேசிய விலங்காகப் `பசு’ வை அறிவிக்கக் கோரி ‘பாத யாத்திரை’

மேலும், “முதல் கூட்டம் கோபாஷ்டமியைக் கொண்டாடும் வகையில் நவம்பர் 22 நண்பகல் 12 மணிக்கு, அகர் மால்வாவில் உள்ள பசு சரணாலயத்தில் நடைபெறும்.” என்று அறிவித்துள்ளார்.

2017 செப்டம்பர் மாதம், பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான மத்தியப் பிரதேச அரசால்,  இந்தியாவின் முதல் பசு சரணாலயமான ’காம்தேனு கவு’ அமைக்கப்பட்டது. போபாலில் இருந்து 190 கிமீ வடமேற்கே உள்ள அகர் மால்வாவில், 472 ஹெக்டேர் பரப்பளவில் சுமார் 32 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டது. பின்னர் இந்தச் சரணாலயம் நிதி நெருக்கடிகளால் தனியார்மயமாக்கப்பட்டது.

மாட்டுச் சாண சிப் குறித்த ஆய்வு முடிவுகள் எங்கே? அறிவியலாளர்கள் கேள்வி

இந்த நிதியாண்டில், மாநில அரசால் நடத்தப்படும் பசு தங்குமிடங்களில் உள்ள 1,80,000-க்கும் மேற்பட்ட பசுக்களுக்கு உணவளிக்க ரூபாய் 11 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது ஒரு நாளைக்கு ஒரு பசுவிற்கு ஒரு ரூபாய் 60 பைசா ஒதுக்கியிருந்தது என்று ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ இணையதளம் தெரிவித்துள்ளது.

சென்ற 2019-20 நிதியாண்டிற்கான பட்ஜெட்டில், கால்நடை வளர்ப்புத் துறைக்கு 132 கோடி ரூபாய் ஒதுக்கியிருந்தது. அதில் இருந்து 90 சதவீத (ரூபாய் 112 கோடி) நிதியை, இந்த நிதியாண்டு பட்ஜெட்டில் குறைத்துள்ளது என்று அதில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதம், பெயர் சொல்ல விரும்பாத மத்தியப் பிரதேச அரசு அதிகாரி ஒருவர் “முன்பு ஒரு பசு ஒரு நாளைக்கு ரூபாய் 20 கொடுக்கப்பட்டதை மிகவும் குறைத்தார்கள். இது மட்டுமல்லாமல், பசு பாதுகாப்பிற்காக மக்களிடம் நன்கொடை பெறும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் இதுவரை ரூபாய் 22,000 மட்டுமே வசூலானது. இது முழுக்க ஒரு தோல்விகரமான திட்டம் என்று நிரூபணமாகியுள்ளது.” என்று கூறியதாக ‘ஹிந்துஸ்தான் டைம்ஸ்’ தெரிவித்துள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பசுவைக் கொன்று மாட்டிறைச்சி விற்பனை செய்ததாக ரஹ்முதீன் என்பவர் பசுவதை தடுப்புச் சட்டத்தின் 3, 5 மற்றும் 8 ஆகிய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு மாத காலம் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

இதையடுத்து அவர் அலகாபாத் உயர் நீதி மன்றத்தில் ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்திருந்தார்.

“பசுவதை தடுப்புச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது” – அலகாபாத் உயர்நீதிமன்றம்

மனுவை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், “உத்தரப்பிரதேச மாநிலத்தின் ‘பசுவதை தடுப்புச் சட்டம் 2020’ அப்பாவி மக்களுக்கு எதிராக தவறாகப் பயன்படுத்தப்படுகிறது” என்று குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்