Aran Sei

லட்சத்தீவுகளில் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்த திரைப்பட தயாரிப்பாளர் – தேசத்துரோக வழக்கு பதிந்த காவல்துறை

லையாள செய்தி தொலைக்காட்சி ஒன்றில் நடைபெற்ற விவாதத்தின்போது லட்சத்தீவுகளின் கொரோனா நிலைமைகுறித்து கருத்து தெரிவித்ததற்காக திரைப்பட தயாரிப்பாளர் ஆயிஷா சுல்தானா மீது லட்சத்தீவு காவல்துறையினர் தேச துரோக வழக்கு பதிவு செய்துள்ளனர்.

லட்சத்தீவுகள் பிரிவு பாஜகவின் தலைவர் அப்துல் காதர் அளித்த புகாரில் பெயரில், கவராட்டி நிலையத்தில் அவர்மீது வழக்கு பதியப்பட்டுள்ளது.

‘சொந்த கட்சியின் பணத்தையே திருடிய கேரள பாஜக; அவிழும் உண்மைகள் – ராஜீவ் ராமச்சந்திரன்

செட்லட் தீவுகளை பூர்வீகமாக கொண்ட அயிஷா சுல்தானா, “லட்சத்தீவு மக்களுக்கு எதிராக கொரோனாவை ஒரு ஆயுதமாக ஒன்றிய அரசு பயன்படுத்துகிறது” என பேசியிருப்பதாக, அப்துல் காதர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.

இதனைத் தொடர்ந்து அயிஷா சுல்தானா மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 124 A (தேசத்துரோகம்) மற்றும் 153 B (வெறுப்பு பேச்சு) கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.

கிரிக்கெட்டில் நிறவெறிக்கு எதிரான இயக்கம் தீவிரமாக செயல்படுத்தப்பட வேண்டும் – மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வீரர் ஜேசன் ஹோல்டர்

லட்சத்தீவுகளின் கடைபிடிக்கப்பட்டு வந்த கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஒரு ஆண்டுக்கும் மேலாக தொற்று பாதிக்காத ஒரு பகுதியாக இருந்து வந்தது. ஆனால், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், லட்சத்தீவுகளின் புதிய நிர்வாகியாக பொறுப்பேற்ற பிரபுல் கே பட்டேல், கட்டுப்பாடுகளை தளர்த்தியதை தொடர்ந்து அங்கு 9 ஆயிரத்திற்கும் அதிகமானோர்க்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

அயிஷா சுல்தானா மீதான தேசத்துரோக குற்றச்சாட்டிற்கு கண்டனம் தெரிவித்துள்ள சாகித்ய பிரவர்தக சங்கம், ”லட்சத்திவுகளின் புதிய நிர்வாகி மேற்கொண்ட ‘மனிதாபிமானமற்ற’ நடவடிக்கைகளை குறித்தே  அயிஷா கருத்து தெரிவித்தார்” எனக் கூறியுள்ளது.

‘டாக்டர்கள் இறைதூதர்கள், கடவுளின் வரப்பிரசாதம்; அவசர சிகிச்சை அலோபதிதான் சிறந்தது’ – பாபா ராம்தேவ்

மேலும், ஒரு விசயத்தைக் கடந்து செல்லும்போது தெரிவித்த கருத்தைத் தேச துரோக குற்றச்சாட்டாக சித்தரிப்பது, வருந்ததக்கது என தெரிவித்துள்ளது.

 

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்