ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பேசிக் சேவிங்க்ஸ் பேங்க் டெபாசிட் கணக்கு வைத்திருப்பவர்கள் ஏடிஎம்கள் அல்லது கிளைகளில் இருந்து மாதம் 4 முறைக்கு மேல் பணம் எடுத்தால் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா அறிவித்துள்ளது.
இது தொடர்பாக ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “ஒரே மாதத்தில், மேற்க்கொள்ளப்படும் 5வது பரிவர்த்தனை முதல் 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும். 10 பக்கங்களை கொண்ட காசோலை புத்தகத்திற்கு 40 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி மற்றும் 40 பக்கங்கள் கொண்ட காசோலை புத்தகத்திற்கு 75 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
”நிதியல்லாத ஏடிஎம் பயன்பாடுகளுக்குக் கட்டணம் வசூலிக்கப்படாது என்றும், மூத்த குடிமகன்களுக்குக் காசோலை கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் எஸ்பிஐ கூறியுள்ளது.
கும்பமேளா கொரோனா போலி பரிசோதனைகள்: குற்றத்திற்கு துணை நின்றதா பாஜக? – விலகும் திரை பெருகும் ஒளி
மேலும் இந்த கட்டண முறைகளை ஜூலை 1 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.