Aran Sei

‘டெல்லி எல்லையில் நடந்த படுகொலை சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும்’- போராடும் விவசாயிகள் கோரிக்கை

டெல்லி சிங்கு எல்லையில் பட்டியல் சாதியைச் சேர்ந்த ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உச்ச நீதிமன்றம் விசாரிக்க வேண்டும் என்று விவசாய சட்டங்களை நீக்கக் கோரி போராடி வரும் விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவான சம்யுக்த் கிசான் மோர்ச்சா கோரிக்கை விடுத்துள்ளது.

இக்கொலைக்கு பொறுப்பேற்றுள்ள நிஹாங்குகளை ஒன்றிய அமைச்சர்கள் நரேந்திர சிங் தோமர் மற்றும் கைலாஷ் சவுத்ரி ஆகியோர்  சந்தித்தது குறித்தும் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரியுள்ளது.

இக்கொலை தொடர்பாக ஆராய, உண்மை அறியும் குழு ஒன்றை சம்யுக்த் கிசான் மோர்ச்சா அமைத்துள்ளது. இக்குழு மூன்று நாட்களில் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளது.

இதுகுறித்து, நேற்று(அக்டோபர் 21), டெல்லி சிங்கு எல்லையில் சம்யுக்த் கிசான் மோர்ச்சா கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளது.

அதைத்தொடர்ந்து பேசிய சம்யுக்த் கிசான் மோர்ச்சா தலைவர் ஹரிந்தர் சிங் லக்ஹோவால், “ஆதாரங்களைக் கொண்டு பார்த்தால், இச்சம்பவம் எதார்த்தமாக நடந்ததாக தெரியவில்லை என்பது தெளிவாகிறது. விவசாயிகள் போராட்டத்திற்கு அவதூறு செய்யவும், வன்முறையில் சிக்க வைக்கவும் சதி நடக்கிறது. நிஹாங்கு தலைவர்களுடன் புகைப்படங்களில் இருக்கும் அமைச்சர்கள் தோமர் மற்றும் சவுத்ரி ஆகியோர் பதவி விலக வேண்டும். மேலும், இச்சம்பவம் உச்ச நீதிமன்ற நீதிபதியால் விசாரிக்கப் பட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

Source: New Indian Express

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்