Aran Sei

சமஸ்கிருத திணிப்பிற்கு மாணவர்கள் எதிர்ப்பு – கைது செய்த பாஜக அரசு

மஸ்கிருதம் கட்டாயமாக்கப்படுதலுக்கு எதிராகப் போராடியதால் மணிப்பூர் மாணவர் சங்கத்தின் உறுப்பினர்கள் இருவர், காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கின்றனர் என தி வயர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது.
மணிப்பூரின் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் சமஸ்கிருதம் ஒரு பாடமாக அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்ததற்கு எதிராக மணிப்பூர் மாணவர் சங்கம் ஓர் அறிக்கையை நவம்பர் 20 அன்று வெளியிட்டிருந்தது.

பொதிகைத் தொலைக்காட்சியில் சமஸ்கிருதச் செய்திக் குறிப்பு : உயர்நீதி மன்றத்தில் முறையீடு

“இந்து பிராமணர்களின் குணாதிசயங்களான வெறுப்பு, தீண்டாமை, பாலியல் பாகுபாடு, ஆணாதிக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டிருக்கும் சமஸ்கிருதத்தை இந்த அரசு திணிக்கப் பார்க்கிறது. பிராமணர்களை எஜமானர்களாக ஏற்றுக்கொள்ளும் அரசு, மணிப்பூரின் மொழிகள் அழிவதைக் குறித்து கவலைப்படவில்லை” என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

நவம்பர் 30 அன்று, முந்தைய அறிக்கையில் பயன்படுத்தியிருக்கும் சில வார்த்தைகள் குறிப்பிட்ட மதக்குழுவினரின் உணர்வுகளைப் புண்படுத்துவதாக இருக்கிறது என்று மாணவர் சங்கம் மன்னிப்பு கேட்டிருந்தது.

ஆர்எஸ்எஸ்-ம் அம்பேத்கரும் – என்றுமே இருந்திராத தோழமை

இதைத் தொடர்ந்து, டிசம்பர் 8 ஆம் தேதி, டெல்லி சத்யவதி கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் சிங்கஜித் தொக்சோம் மற்றும் கென்னடி மொய்ரங்தம் ஆகியோர் மீது, மத மற்றும் இன அடிப்படையில் வெறுப்பைத் தூண்டியதற்காகவும், பொது அமைதியைக்  குலைக்க முயன்றதற்காகவும், மக்கள் மத்தியில் அச்சத்தை விதைத்ததற்காகவும், குற்ற நடவடிக்கை புரிந்ததாகவும் நான்கு பிரிவுகளுக்குக் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

“மனுநீதியே ஆட்சி செய்கிறது” – ஓய்வு பெற்ற நீதிபதி பி.பி.சாவந்த்

கைது செய்யப்பட்ட பிறகு இம்பாலிற்குக் கொண்டு வரப்பட்ட மாணவர்களுக்கு, மேற்கு இம்பால் மாவட்ட முதன்மை நீதிபதி இருபதாயிரம் ரூபாய் அபராதம் விதித்த பிறகு, தேர்வு காரணமாக ஜாமீன் அளித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்