புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக்கோரி நடைபெற்று வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக ’சக்கா சாம் (சாலை மறியல்)’ போராட்டத்தில் விவசாயிகள் ஈடுபட்டிருந்தனர். போராட்டத்திற்கு முன்னர், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி “நாட்டிற்கு கேடுவிளைக்கும் விவசாய சட்டங்களுக்கு எதிராக, அமைதியான ’சத்தியாகிரகம்’ முறையில் விவசாயிகள் போராடி வருவது, தேச நலனில் அவர்களுக்கு இருக்கும் அக்கறையைக் காட்டுகிறது” என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்கும் விதமாகப் போரட்டக்களத்திற்கு அருகேயுள்ள பகுதிகளில் இணைய சேவை முடக்கம், பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்ட அதிகாரிகளை எதிர்த்து, பிப்ரவரி 6 ஆம் தேதி மதியம் 12 முதல் 3 வரை நாடும் முழுவதும் உள்ள தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளை மறிக்கும் போராட்டத்திற்கு விவசாய சங்கங்கள் பிப்ரவரி 1 ஆம் தேதி, அழைப்பு விடுத்திருந்தனர்.
இது தொடர்பாகத் தனது ட்விட்டரில் இந்தியில் பதிவிட்டிருந்த ராகுல் காந்தி, ”மூன்று விவசாய சட்டங்கள் விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு மட்டுமல்லாது, நாட்டிற்கு, நாட்டு மக்களுக்கும் எதிரானது, அமைதியான சத்தியாகிரக முறையில் போராடி வரும் விவசாயிகளின் செயல் தேச நலனில் அக்கறை கொண்டது. அதற்கு முழு ஆதரவு” எனப் பதிவிட்டிருந்தார்.
अन्नदाता का शांतिपूर्ण सत्याग्रह देशहित में है- ये तीन क़ानून सिर्फ़ किसान-मज़दूर के लिए ही नहीं, जनता व देश के लिए भी घातक हैं।
पूर्ण समर्थन!#FarmersProtests
— Rahul Gandhi (@RahulGandhi) February 6, 2021
விவசாயிகளின் போராட்ட இடத்திற்கு அருகே பல்வேறு தடுப்புகளை அமைத்திருந்த புகைப்படத்தை, தனது ட்விட்டரில் பதிவிட்டிருந்த பிரியங்கா காந்தி, ”பயத்தின் சுவர் அமைத்து நீங்கள் ஏன் பயப்படுகிறீர்கள்” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
क्यों डराते हो डर की दीवार से ? pic.twitter.com/0th1OpRu3u
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) February 6, 2021
விவசாய சங்கங்கள் அழைப்பு விடுத்திருந்த ‘சக்கா ஜாம்’ போராட்டத்திற்கு பிப்ரவரி 5 ஆம் தேதி காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்திருந்ததோடு, கட்சி தொண்டர்கள், விவசாயிகளோடு தோளோடு தோள் நிற்பார்கள் என்றும் கூறியது.
இந்தச் சட்டங்கள், குறைந்தபட்ச ஆதரவு விலை முறையை அகற்றுவதற்கு வழி வகுக்கும் என்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் குற்றம்சாட்டும் நிலையில், புதிய சட்டங்கள் விவசாயிகளுக்கு வாய்ப்புகளைத் தருவதொடு, புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த உதவும் எனக் கூறி வருகிறது.
இதற்கு முன்பாகப் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு தொடர்பாகக் கருத்து தெரிவித்திருந்த ராகுல் காந்தி, மோடி அரசாங்கம், நாட்டின் பட்ஜெட் மட்டுமல்ல, வீட்டின் பட்ஜெட்டையும் சீர்குலைத்து விட்டது எனத் தெரிவித்திருந்தார்.
Source : PTI
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.