விவசாய சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெறாவிட்டால், பாஜக கூட்டணியில் இருப்பதை பற்றி மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும் என்று ராஷ்டிரிய லோகாந்த்ரிக் கட்சி (ஆர்எல்பி) தலைவர் ஹனுமான் பெனிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் கின்வ்சரைச் சேர்ந்த ஆர்எல்பி கட்சியின் தலைவரான ஹனுமான் பெனிவால் ஜாட் இன மக்களின் நன்கு அறியப்பட்ட தலைவர் ஆவார். ஆரம்பத்தில் பாஜக உறுப்பினராக இருந்தவர். பின், அப்போதைய முதலமைச்சர் வசுந்தரா ராஜேவுடனான கருத்து வேறுபாடுகள் காரணமாக கட்சியை விட்டு வெளியேறினார். அதை தொடர்ந்து, 2018-ம் ஆண்டு, சொந்தமாக கட்சி தொடங்கி, மாநில சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார்.
’தில்லி சலோ’ : தலைநகர் நோக்கிப் படையெடுக்கும் ராஜஸ்தான் விவசாயிகள்
2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது, ஆர்எல்பி பாஜகவுடன் கூட்டணி வைத்தது. ஆனால், தேர்தல்களுக்குப் பிறகு, ஹனுமான் பெனிவால் தேசிய ஜனநாயகக் கூட்டணியுடனான (என்டிஏ) உறவை துண்டிக்கும் விருப்பம் உள்ளதாக தனது அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.
இந்நிலையில், நேற்று (நவம்பர் 30) ஹனுமான் பெனிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து பகிர்ந்திருந்துள்ளார். அதில், ”அமித்ஷா, நாட்டில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்ட உணர்வைக் கருத்தில் கொண்டு, விவசாயம் தொடர்பாக சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட 3 மசோதாக்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.” என்று கோரிக்கை வைத்துள்ளார்.
வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாசோதாக்கள் – ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல்
மேலும், ”சுவாமிநாதன் ஆணையத்தின் முழு பரிந்துரைகளையும் செயல்படுத்த வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியான தீர்வை வழங்குவதற்காக, டெல்லியில் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த சரியான இடத்தை கொடுக்க வேண்டும்.” என்று தெரிவித்துள்ளார்.
श्री @AmitShah जी,देश मे चल रहे किसान आंदोलन की भावना को देखते हुए हाल ही में कृषि से सम्बंधित लाये गए 3 बिलों को तत्काल वापिस लिया जाए व स्वामीनाथन आयोग की सम्पूर्ण सिफारिशों को लागू करें व किसानों को दिल्ली में त्वरित वार्ता के लिए उनकी मंशा के अनुरूप उचित स्थान दिया जाए !
— HANUMAN BENIWAL (@hanumanbeniwal) November 30, 2020
குறைந்தபட்ச ஆதார விலை – மாநிலங்கள் கேட்டது ஒன்று, மத்திய அரசு கொடுத்தது ஒன்று
மற்றுமொரு ட்வீட்டில், “ஆர்எல்பி கட்சி, என்டிஏ-வின் ஒரு கூட்டணி கட்சி மட்டுமே. ஆனால் ஆர்எல்பி-யின் சக்தி விவசாயிகளும் இளைஞர்களிடமும் தான் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், விவசாயிகளின் நலனுக்காக என்டிஏ-வின் கூட்டணியில் இருப்பதைப் பற்றி நான் மறுபரிசீலனை செய்ய வேண்டியிருக்கும்.” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
चूंकि @RLPINDIAorg एनडीए का घटक दल है परन्तु आरएलपी की ताकत किसान व जवान है इसलिए अगर इस मामले में त्वरित कार्यवाही नही की गई तो मुझे किसान हित मे एनडीए का सहयोगी दल बने रहने के विषय पर पुनर्विचार करना पड़ेगा !
— HANUMAN BENIWAL (@hanumanbeniwal) November 30, 2020
அத்துடன், இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளதாக ட்வீட் செய்துள்ளார்.
சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க
உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.