Aran Sei

பாஜக கூட்டணியில் குழப்பம்? : ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை பாஜக அழிப்பதாக குற்றச்சாட்டு

பாஜகவுக்கும் ஐக்கிய ஜனதா தள கட்சிக்கும் இடையிலான உறவில் நெருடல் ஏற்பட்டுள்ள நிலையில், தேஜஸ்வி யாதவை முதல்வராக்கிவிட்டு, தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிதீஷ் குமாருக்கு ராஷ்ட்ரிய ஜனதா தளம்(ஆர்ஜேடி) ஆலோசனை தெரிவித்துள்ளது.

சமீபத்தில், அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ஐக்கிய ஜனதா தளத்தைச் சேர்ந்த 7 சட்டசபை உறுப்பினர்களில் 6 பேர், பாஜகவில் இணைந்தனர். இந்தக் கட்சி தாவல், பிஹார் மாநில முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதாதளம் – பாஜக கூட்டணியில் நெருடலை ஏற்படுத்தி உள்ளதாக தி இந்து தெரிவித்துள்ளது.

பீகார் தேர்தல் முடிவுகள் – கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் என்ன? – நவநீத கண்ணன்

இந்நிலையில், நேற்று (டிசம்பர் 30) தேஜஸ்வி யாதவ் தலைமையிலான  ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் உதய்நாராயண் சவுத்ரி பாட்னாவில் செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார்.

அப்போது, “தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக பெரிய மீனாக இருந்துகொண்டு மற்ற கட்சிகளை சிறிய மீன்களை விழுங்குவது போல விழுங்கி வருகிறது. இதனால்தான் சிவசேனா, அகாலிதளம் போன்ற கட்சிகள் கூட்டணியில் இருந்து வெளியேறின. இப்போது ஐக்கிய ஜனதா தளத்தையும் பாஜக விழுங்கப் பார்க்கிறது.” என்று குற்றஞ்சாட்டியுளதாக தி இந்து குறிப்பிட்டுள்ளது.

பீகாரில் தேர்தல் வெற்றி ஊர்வலம் – மசூதியைச் சூறையாடிய பாஜக ஆதரவாளர்கள்

மேலும், “பாஜகவுடனான உறவை முறித்துக் கொண்டு, தேஜஸ்வி யாதவை பீகார் முதல்வராக்க நிதிஷ் குமார் முன்வர வேண்டும். அதற்கு பின், அவர் தேசிய அரசியலில் கவனம் செலுத்த வேண்டும். அப்படிச் செய்தால் அவரை பிரதமர் வேட்பாளராக நாங்கள் முன்னிறுத்துவோம்.’’ என்றும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் உதய்நாராயண் சவுத்ரி தெரிவித்துள்ளார்.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்