Aran Sei

ஆளுனருக்கு 300 கோடி லஞ்சமா?: அம்பானி, ஆர்எஸ்எஸ் பிரமுகர் மீது குற்றச்சாட்டு – சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்த ஜம்மு காஷ்மீர் நிர்வாகம்

ம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக், அம்பானியின் கோப்புக்கு ஒப்புதல் அளிக்க தனக்கு 300 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து சிபிஐ விசாரணைக்கு ஜம்மு காஷ்மீர் அரசு பரிந்துரைத்துள்ளது.

“ஜம்மு காஷ்மீர் முன்னாள் ஆளுநர் சத்ய பால் மாலிக் முன்வைத்த லஞ்ச குற்றச்சாட்டுகள் குறித்து நாங்கள் (நிர்வாகம்) கவனத்தில் கொள்வோம். இவரைப் போன்ற உயர் பதவியில் உள்ளவர்கள் இது போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தால், அது விசாரிக்கப்பட வேண்டும்” என்று ஜம்முவில் நேற்று (மார்ச் 25) செய்தியாளர்களிடம் பேசியுள்ள ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா ​​கூறியுள்ளார்.

மேலும், “முன்னாள் ஆளுநரின் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு நிர்வாகம் பரிந்துரைத்துள்ளது. சிபிஐ விசாரணையில், அனைத்தும் தெளிவாகும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

‘விவசாயிகள் போராட்டம் குறித்து நான் பேசினால் டெல்லியிலிருந்து அழைப்பு வரும்’ – மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்

கடந்த ஆண்டு அக்டோபர் 17ஆம் தேதி ராஜஸ்தானில் நடந்த நிகழ்ச்சியின்போது பேசிய சத்ய பால் மாலிக் பேசியிருந்தார். அப்போது ​​அம்பானி மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகரின் இரண்டு கோப்புகளில் கையெழுத்திடுவதற்காக தனக்கு ரூ.300 கோடி லஞ்சம் கொடுக்க அணுகியதாக குறிப்பிட்டிருந்தார்.

“என்னுடைய பரிசீலனைக்கு இரண்டு கோப்புகள் வந்திருந்தன. இவற்றுக்கு ஒப்புதல் அளித்தால், ஒவ்வொரு கோப்பிற்கும் தலா ரூ.150 கோடி பெறலாம் என செயலர் ஒருவர் கூறினார். நான் காஷ்மீருக்கு ஐந்து குர்தா-பைஜாமாக்களை கொண்டு வந்துள்ளேன். அவற்றுடனே திரும்பச் செல்வேன் என்று கூறி அந்த லஞ்சத்தை நிராகரித்தேன்” என்று அவர் கூறியிருந்தார்.

‘ஒரு நாய்க்கு தெரிவிக்கப்படும் இரங்கல், இறந்தபோன 250 விவசாயிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை’ – மேகாலயா ஆளுநர்

தற்போது மேகாலயா ஆளுநராக இருக்கும் சத்ய பால் மாலிக், “நான் அந்த இரண்டு ஒப்பந்தங்களையும் ரத்து செய்துவிட்டேன். இது குறித்த விசாரணைக்கு நான் தயாராக இருக்கிறேன். நான் நேர்மையானவன். சுத்தமானவன். நான் உடனடியாக பிரதமர் மோடியிடம், பதவியை விட்டு விலக தயார் என கூறினேன். ஆனால் நான் காஷ்மீர் ஆளுநராகவே என் பணியை தொடர்ந்தாலும், அந்த இரண்டு கோப்புகளுக்கும் நான் ஒப்புதல் அளிக்க போவதில்லை எனவும் கூறினேன்” என்று தெரிவித்திருந்தார்.

2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், ஜம்மு காஷ்மீர் ஆளுநராக சத்ய பால் மாலிக் இருந்தபோது, ​​ரிலையன்ஸ் ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட அரசு ஊழியர்களுக்கான குரூப் மெடிக்கல் இன்சூரன்ஸ் ஒப்பந்தத்தை ரத்து செய்தார்.

இந்த ஒப்பந்தம் முழுக்க முழுக்க மோசடியானது என்று சத்ய பால் மாலிக் குற்றஞ்சாட்டியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: New Indian Express

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்