Aran Sei

தாய் மொழியில் மருத்துவப் படிப்பு; இடஒதுக்கீடும் உறுதி செய்யப்படும் – ரமேஷ் பொக்ரியால்

தாய் மொழியில் மருத்துவம், பொறியில் படிப்புகளை பயிற்றுவிப்பதற்கான திட்டம் வகுக்கப்படும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.

தேசிய கல்விக் கொள்கையை அமல் படுத்துவது தொடர்பாக நடைபெற்ற கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மருத்துவம், பொறியியல், சட்டம் உட்பட தொழில் கல்விகள் அனைத்தும், தாய் மொழியில் பயிற்றுவிக்கப்படும் என்று கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மாணவர் மீதும் எந்த ஒரு மொழியும் திணிக்கப்படாது என்பதை அழுத்தமாக கூறியுள்ள ரமேஷ் பொக்ரியால், அறிவுத்திறன் இருந்தும் ஆங்கிலம் தெரியாத காரணத்தினால் மாணவர்கள் தொழில் படிப்புகளை படிக்கமுடியாத நிலை மாறும் என்றும் கூறியுள்ளார்.

தொழில்படிப்புகளை தாய் மொழியில் பயிற்றுவிப்பதற்கான திட்டத்தை வகுக்கும் குழுவிற்கு, உயர் கல்வித்துறையின் செயலாளர் அமித் கேர் தலைமை தாங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரின் கருத்துகளையும், ஆலோசனைகளையும் பெற்று, ஒரு மாத காலத்தில் இந்த குழு தனது அறிக்கையை சமர்ப்பிக்கும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதத்தில், தேசிய கல்விக் கொள்கையில் ‘இடஒதுக்கீடு’ என்ற வார்த்தையே இல்லாததை சுட்டிக்காட்டியிருந்தார். தேசிய கல்விக்கொள்கையை அமல்படுத்தினால், இடஒதுக்கீட்டிற்கு பாதிப்பு ஏற்படுமா என்பது குறித்து பிரதமர் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் கேட்டிருந்தார்.

புதன்கிழமை (02.12.2020) நடைபெற்ற கூட்டத்தில் இதுகுறித்து பேசிய கல்வியமைச்சர் ரமேஷ் பொக்ரியால், “அரசியல் சாசனத்தின் பிரிவு 15 மற்றும் 16ல் குறிப்பிட்டுள்ளபடி, தேசிய கல்விக்கொள்கையில் இடஒதுக்கீடு உறுதிசெய்யப்பட்டுள்ளது. தேசிய கல்விக்கொள்கை, அரசியல்சாசனத்திற்கு உட்பட்டே வடிவமைக்கப்பட்டிருப்பதால், இடஒதுக்கீடு குறித்து மேலும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நான் கருதுகிறேன்” என கூறியுள்ளார்.

aran-logo

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்