Aran Sei

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் – ராஜஸ்தானிலும் நிறைவேற்றம்

credits : the hindu

த்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட மூன்று மசோதாக்களும் நிறைவேற்றப்பட்டன. ஒன்பது மணி நேர விவாதத்திற்கு பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் நேற்று அவை குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டன.

விவசாயச் சட்டங்களுக்கு எதிரான மசோதாக்கள் – பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானிலும்

செப்டம்பர் 14-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அரசு வேளாண் தொடர்பான மூன்று மசோதாக்களை தாக்கல் செய்திருந்தது. வேளாண் விளைபொருள் வர்த்தக மசோதா, விவசாயிகளின் விளை பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க உத்தரவாதம் அளிக்கும் மசோதா, அத்தியாவசிய பொருட்கள் திருத்த சட்ட மசோதா ஆகியன ஆகும்.

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நிறைவேற்றப்பட்ட வேளாண் மசோதாக்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்து சட்ட அந்தஸ்து வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து சட்டங்கள் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த மூன்று மசோதாக்களையும் எதிர்த்து நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் ராஜஸ்தான் அரசு கடந்த 31-ம் தேதி மத்திய அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை மறுக்கும் வகையில் மூன்று மசோதாக்களை  சட்டப்பேரவையில் தாக்கல் செய்தது. சட்டப்பேரவை விவகாரத் துறை அமைச்சர் ஷாந்தி தரிவால் மூன்று மசோதாக்களையும்  சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தினார். அவை அத்தியாவசியப் பொருட்கள் மசோதா 2020, விளைநிலத்தில் வேலை செய்வதற்கான ஒப்பந்தம் மற்றும் விலை உத்தரவாத மசோதா 2020, விவசாயிகளின் உற்பத்தி மூலம் நடக்கும் வர்த்தக மசோதா 2020 ஆகியனவாகும்.

வேளாண் சட்டங்களுக்கு எதிரான மாசோதாக்கள் – ராஜஸ்தான் சட்டப்பேரவையில் தாக்கல்

இந்தச் சட்டங்கள் விவசாயிகள், விவசாய கூலிகள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபடும் அனைவரையும் பாதுகாக்கும் என கூறியுள்ளது ராஜஸ்தான் அரசு. மேலும் விவசாய பொருட்களை வாங்குபவர்கள் அதை பதுக்குவதையும் அதன் மூலம் கருப்புச் சந்தை உருவாக்கத்தையும் தடுக்க உதவுகிறது என் கூறுகின்றனர். மேலும் விவசாயிகளை துன்புறுத்துபவர்களுக்கு ரூ. 5 லட்சம் அபராதமும் , 5-7 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. விவசாய பொருட்களை குறைந்தபட்ச ஆதரவு விலையின் கீழ் விற்க கூடாது என்பனவற்றை குறிப்பிட்டுள்ளது.

சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாளில் இந்த மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. மசோதாக்கள் அறிமுகப்படுத்தப்பட்ட உடனேயே அவை ஒத்திவைக்கப்பட்டது.

இந்த மூன்று மசோதாக்கள் குறித்து நேற்று ராஜஸ்தான் சட்டமன்றத்தில் சுமார் ஒன்பது மணி நேரம் நடைபெற்றது. இந்த விவாதத்திற்குப் பிறகு நடந்த குரல் வாக்கெடுப்பின் மூலம் இது சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இந்த குரல் வாக்கெடுப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். மேலும் இது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டுவர அரசியலமைப்பின் படி மாநில அரசுக்கு எந்த அதிகாரமும் இல்லை என கூறியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த மாநில அரசு, அரசியலமைப்புச் சட்டம் 254(2)ன் அட்டவணை 7 ன் படி விவசாயம், நிலம் மற்றும் சந்தை மாநில அரசின் அதிகாரத்தின் கீழ் வருவதாக கூறியுள்ளனர். இதனால், மாநில சட்டப் பேரவை விவசாயம் குறித்து சட்டம் இயற்றலாம் என கூறியுள்ளனர்.

சட்டமன்றத்தில் நடந்த விவாதத்தின் போது பேசிய சட்டமன்ற விவகாரத்துறை அமைச்சர் ஷாந்தி தரிவால் ”மத்தியில் இருக்கும் பாஜக அரசு இந்த விவசாய சட்டங்களின் மூலம் விவசாயத்தை கார்ப்பரேட்களிடம் தாரை வார்க்க முடிவு செய்துள்ளனர் என குற்றஞ்சாட்டியுள்ளார். ராஜஸ்தானில் நாங்கள்இதை நடக்க விடமாட்டோம். எங்களுடைய புதிய சட்டங்கள் விவசாயிகளை காப்பாற்றும்” என கூறியுள்ளார். மேலும் மத்திய அரசின் சட்டங்கள் பொது விநியோக முறையை சீரழிக்கும் என கூறியுள்ள அவர் அரிசி கோதுமை போன்ற அத்தியாவசிய பொருட்கள் கூட கொள்முதல் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

விவசாய மசோதாக்கள் : உள்ளூர் வணிகர்களுக்கு பதில் கார்ப்பரேட்டுகள்

மேலும் ”கார்ப்பரேட்கள் விவசாயிகளின் மண்டிகளுக்கு எதிராக கடை போட வேண்டுமா? இது விவசாயிகளுக்கு எதிராக செய்யும் துரோகம்” என குற்றஞ்சாட்டியுள்ளார்.

விவாதத்தில் பேசிய ராஜஸ்தானின் விவசாயத் துறை அமைச்சர் லால் சந்த் கட்டாரியா மத்திய அரசின் இந்த திட்டங்கள் ”விவசாயிகளை தங்கள் சொந்த நிலத்திலேயே கூலிகளாக மாற்றிவிடும்” என கூறியுள்ளார்.

விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் குலாப் சந்த் கட்டாரியா இது சுவாமிநாதன் கமிஷன் வழங்கிய அறிவுரைப்படி ”ஒரு தேசம் ஒரு சந்தை” என்பதை அடிப்படையாக வைத்து மத்திய அரசு கொண்டு வந்துள்ள சட்டம் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம் ஒப்புதலுக்காக கவர்னரிடம் அனுப்பப்பட்டுள்ளது.

பஞ்சாப் விவசாய மசோதாக்கள் நிறைவேறின – புறக்கணித்த பாஜகவுக்கு ப.சிதம்பரம் கண்டனம்

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிராக பஞ்சாபைத் தொடர்ந்து ராஜஸ்தானும் சட்டம் இயற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சுதந்திர ஊடகத்தை ஆதரிக்க

உங்கள் பங்களிப்பு, அரண்செய் ஊடகத்தின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இதன் மூலம் எங்களால் தொடர்ந்து சிறந்த செய்திகளை அனைவருக்கும் வழங்க முடியும். உங்கள் பங்களிப்பு எவ்வளவு சிறிதாயினும் அல்லது பெரிதாயினும் அது எங்களின் எதிர்காலத்திற்கு மிகவும் அவசியமானது.

மற்ற சில பதிவுகள்